என்ன ஆட்டம் ஆடுற என ஐஸ்வர்யா ரஜினிகாந்த்திற்கு செக் வைக்கும் தனுஷ்.! வெடித்தது புதிய பிரச்சனை…

dhanush-aishwarya
dhanush-aishwarya

சினிமாவில் உள்ள நடிகர் நடிகைகள் காதலித்து திருமணம் செய்து கொள்வது வாடிக்கையான ஒன்று தான் அதேபோல் ஒரு சில நடிகர் மற்றும் நடிகைகள் தான் தங்களுடைய காதலை திருமணம் வரை கொண்டு சென்று அதனை அனுபவித்து ருசித்து வாழ்ந்து வருகிறார்கள் ஒரு சிலரோ சில வருடங்களிலேயே விவாகரத்து பெற்று தனித்தனியாக வாழ்ந்து வருகிறார்கள்.

அதிலும் நாம் பார்க்க இருப்பது வித்தியாசமான ஒருவரை தான் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ் இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்களை  திருமணம் செய்து கொண்டார் இருவரும் பல வருடங்கள் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில் இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள் இந்த நிலையில் தற்பொழுது திடீரென விவாகரத்து செய்துள்ளார்கள்.

இந்த தகவல் சினிமா ரசிகர்களிடம் மட்டுமல்லாமல் பிரபலங்களிடையேவும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதுமட்டுமில்லாமல் பல பிரபலங்கள் இவர்களுக்கு அறிவுரை கூறி வந்தார்கள் உங்களுடைய மகன்களுக்காகவாவது நீங்கள் ஒன்றாக இணைந்து வாழ வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்தார்கள். இந்த நிலையில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள வாத்தி திரைப்படம் நாளை வெளியாக இருக்கிறது இந்த திரைப்படத்தை தெலுங்கு இயக்குனர் அட்லூரி தான் இயக்கியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து அருண் மாதேஸ்வரன் இயக்கும் கேப்டன் மில்லர் என்ற திரைப்படத்திலும் தற்பொழுது தனுஷ் நடித்து வருகிறார். இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்கள் விஷ்ணு விஷால் வைத்து லால் சலாம் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்த் சிறப்பு வேடத்தில் நடிக்க இருக்கிறார் அதற்காக பல கோடி சம்பளமாக பேசப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்தது.

இப்படி இருக்கும் நிலையில் திடீரென லால் சலாம் திரைப்படத்திலிருந்து விஷ்ணு விஷால் விலகுவதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது அதற்கு காரணம் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஓவராக சூட்டிங் ஸ்பாட்டில் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது அதனால்தான் இந்த முடிவை விஷ்ணு விஷால் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது இந்த நிலையில் விஷ்ணு விஷால் திரைப்படத்திலிருந்து விலகி நடிகர் தனுஷ் இயக்கும் புதிய திரைப்படத்தில் நடிக்கப் போகிறார் என தகவல் அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.

இதனால் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்களுக்கு தனுஷ் மிகப்பெரிய போட்டியாக களமிறங்கியுள்ளார் என கூறப்படுகிறது.