தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் தனுஷ் தொடர்ந்து பிளாக் பஸ்டர் ஹிட் அடிக்கும் திரைப்படங்களை தந்து வரும் நிலையில் தற்போது இவருடைய நடிப்பில் திருச்சிற்றம்பலம் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றினை பெற்றது இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றியை பெற்றுள்ள நிலையில் தற்போது இவர் வாத்தி, நானே வருவேன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார்.
இவர் நடிப்பில் உருவாகி வரும் நானே வருவேன் திரைப்படத்தினை இவருடைய அண்ணன் செல்வராகவன் அவர்கள் இயக்கி வருகிறார் பல வருடங்கள் கழித்து இவர்களின் கூட்டணியில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் நல்ல வரவேற்பினை பெற்றதும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தற்பொழுது நானே வருவேன் திரைப்படத்தின் பற்றிய சுவாரசியமான தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது இந்த படம் நாளை அதாவது 29ஆம் தேதி அன்று ஏராளமான திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்த படத்தில் நடிகர் தனுஷ் இரட்டை வேடத்திலும் செல்வராகவன் எதிர் மறை கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார்களாம். தனுஷ் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்துள்ள நிலையில் அதில் ஒருவர் சைக்கோ கில்லராக இருக்கிறார்.
சிறுவயதில் அவர் செய்த தப்பிற்காக பெற்றோர்கள் கண்டிக்க கோபத்தில் தனது தந்தையை கொலை செய்து விட்டு வீட்டை விட்டு ஓடி விடுகிறார் அதனை தொடர்ந்து பல வருடங்கள் கழித்து பெரியவராக காண்பிக்கப்படும் தனுஷிற்கு திருமணமாகி பிள்ளைகள் இருக்கின்றனர். நாயகனாக தனுஷ் மற்றும் அவரது குடும்பம் குறித்து காட்டப்படுகிறது அதில் இரண்டு தனுஷிற்கும் இரட்டைக் குழந்தைகள் இருக்கின்றனர்.
அதில் சைக்கோவாக இருக்கும் தனுஷ் தனது மனைவியை கொன்று விட்டு பிள்ளைகளுடன் ஒரு காட்டிற்குள் சென்று விடுகிறார். அங்கு வேட்டையனாக இருக்கும் செல்வராகவன் அவரது மகனை பிடித்து கட்டி வைத்து சித்திரவதை செய்கிறார் அதனை அடுத்து எவ்வாறு தனுஷ் தன்னுடைய மகனை காப்பாற்றுவார் சைக்கோவாக இருக்கும் தனுஷ் திருந்துவாரா என்பது தான் இந்த படத்தின் கிளைமக்ஸ்.