சீறி வரும் அஜித், விஜய்யை பார்த்து ஜகா வாங்கிய தனுஷ்.! எல்லாம் சிவகார்த்திகேயனால் வந்த பயம் தான்…

tamil-actors
tamil-actors

நடிகர் தனுஷ் தனது சினிமா பயணத்தை ஆரம்பத்தில் இருந்து இப்பொழுது வரையிலும் நல்ல நல்ல கதைகளை தேர்வு செய்து அதில் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி தொடர்ந்து வெற்றிகளை குவித்து வருகிறார் இதனால் அவரது மார்க்கெட் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது.

நடிகர் தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திருச்சிற்றம்பலம், நானே வருவேன் போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றன அதனை தொடர்ந்து நடிகர் தனுஷ் கையில் ஏகப்பட்ட படங்கள் இருக்கின்றன. குறிப்பாக அவரது கையில் வாத்தி, கேப்டன் மில்லர் போன்ற படங்கள் இருக்கின்றன அதில் முதலாவதாக வாத்தி திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி உள்ளது.

இந்த படம் குறித்து தற்பொழுது விலாவாரியாக பார்ப்போம்.. வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் இந்த படம் உருவாகி உள்ளது இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். சித்ரா என்டர்டைன்மென்ட் இந்த படத்தை தயாரித்து இருக்கிறது. வாத்தி படத்தில் நடிகர் தனுஷ் உடன் கைகோர்த்து சாய் குமார்..

மற்றும் சம்யுக்தா மேனன், tanikella bharani போன்ற பல முன்னணி நடிகர், நடிகைகள் இந்த படத்தில் நடித்திருக்கின்றனர் இந்த படம் வேற லெவலில் உருவாகியுள்ளது

இப்படி இருக்கின்ற நிலையில் இந்த படம் எப்பொழுது ரிலீஸ் ஆகிறது என்பது குறித்து தகவல் கிடைத்துள்ளது. அதன்படி பார்க்கையில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள வாத்தி திரைப்படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 17ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இருந்தாலும் ஒரு சில ரசிகர்கள் ஏன் தாமதமாகிறது என கேட்கின்றனர் அதற்கான காரணம் இருக்கிறது ஒரு பக்கம் அஜித், விஜய் படங்கள் பொங்கலுக்கு ரிலீசாகிறது. அதனால் தள்ளி போய் உள்ளது என ஒரு பக்கம் கூறினாலும், மறுபக்கம் சிவகார்த்திகேயனின் கடைசியாக நடித்த பிரின்ஸ் படத்தை தெலுங்கு இயக்குனர் ஒருவர் தான் எடுத்தார் அந்த படம் தோல்வி படமாக மாறி உள்ளது. அதேபோல இந்த படத்தையும் ஒரு தெலுங்கு இயக்குனர் எடுத்து உள்ளதால் தனுஷுக்கு தற்பொழுது பயத்தை கொடுத்து இருக்கிறதாம் அதனால் தான் இப்பொழுது எந்த படத்துடன் மோதாமல் சோலோவாக களம் இறங்க பிப்ரவரி 17 தேர்வு செய்திருப்பதாக கூறப்படுகிறது.