தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ் ஆவார்.இவர் துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகி இன்று ஏராளமான படங்களில் நடித்து திரையுலகில் கலக்கி வருகிறார். அந்த வகையில் காதல் கொண்டேன், திருடா திருடி, புதுக்கோட்டையிலிருந்து சரவணன், சுள்ளான், யாரடி நீ மோகினி, குசேலன், படிக்காதவன், மாப்பிள்ளை உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.
தற்போது இவர் நடிப்பில் வெளிவந்த ஏன்னை நோக்கி பாயும் தோட்டா, அசுரன், வட சென்னை போன்ற படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இவர் திரையுலகில் நடிகர், திரைப்பட தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர், திரைப்பட பாடலாசிரியர், திரைக்கதை ஆசிரியர், திரைப்பட இயக்குனர் உள்ளிட்ட பல திறமைகளை கொண்டுள்ளார்.தற்பொழுது இவர் திரையுலகில் ஒரு அங்கமாக திகழ்கிறார்.
அந்த வகையில் இவர் 18 ஆண்டுகளாக தன் திரை வாழ்க்கையை பயணித்து வருகிறார். இந்த நிலையில் ஜூலை 28ஆம் தேதி தனுஷின் 37வது பிறந்த நாள் வருவதால் அவருடைய ரசிகர்கள் மிகவும் ஆக்டிவாக இணையதளத்தில் இவருடைய போஸ்ட்டர்களை வெளியிட்டு வருகின்றன.
இந்த நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனுஷின் வெற்றி படைப்புகளை வைத்து காமன் டிபி ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்பொழுது ட்விட்டரில் தனுஷ் பர்த்டே காமன் டிபி என்ற ஹேஸ்டக்கில் வெளியிடப்பட்டுள்ளது.