தனக்கு நெருக்கமானவர்களுடன் அவதார் 2 படம் பார்த்த தனுஷ்.! இதோ வீடியோ..

dhanush

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ் இவர் ஆரம்பத்திலிருந்து இப்பொழுது வரையிலும் படத்தின் கதையை நன்கு தேர்வு செய்து அதில் தனது முழு திறமையையும் வெளிப்படுத்தி நடித்து வருகிறார் அதனால் அவரது பெரும்பாலான படங்கள் வெற்றி படங்களாகவே இருந்து வருகின்றன இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த..

திருச்சிற்றம்பலம், நானே வருவேன் ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய ஒரு வெற்றியை பதிவு செய்து வசதியது அதனைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் சந்தோஷத்துடன்   மற்ற படங்களில் நடித்து வருகிறார் அவர் கையில் தற்பொழுது கேப்டன் மில்லர், வாத்தி  போன்ற படங்கள் இருக்கின்றன திரையுலகில் வெற்றியை பதிவு செய்து வரும் தனுஷ்  நிஜ வாழ்க்கை அவருக்கு அப்படியே எதிர்மாராக இருந்து வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இவர்கள் இருவருக்கும் லிங்கா, யாத்ரா என இரு மகன்கள் இருக்கின்றனர். தனுஷ் – ஐஸ்வர்யா திருமணம் செய்து கொண்டு 18 வருடங்கள் வாழ்க்கையை வாழ்ந்து வந்த நிலையில் திடீரென சில கருத்து வேறுபாடுகள் காரணமாக பிரிந்தனர்.

அதன் பிறகு தனுஷ், ஐஸ்வர்யாவும் தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். மகன்கள் இருவரும் அவ்வபோது ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் உடன் இருந்து வருகின்றனர் இப்படி இருக்கின்ற நிலையில் அண்மையில் தனுஷ்  தனது மகன்களுடன் செம்ம சந்தோஷமாக இருந்தார் அதுமட்டுமல்லாமல் அவர்களை அவதார் 2 படத்திற்கு அழைத்துச் சென்று படம் பார்த்துள்ளார்.

dhanush
dhanush

அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோ சில இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இதுபோல உங்களது குடும்பத்துடன் தொடர்ந்து நீங்கள் நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என கேட்டுக்கொண்டு லைக்குகளையும், கமெண்டுகளையும் அள்ளி வீசி வருகின்றனர். இதோ அந்த வீடியோ..