பொதுவாக ஆண்டுதோறும் டாப் நடிகர்கள் லிஸ்ட் வெளியாவது வழக்கம் அந்த வகையில் பிரபல திரைப்பட ரேட்டிங் மற்றும் தகவல் தளமாக இருந்து வரும் ஐஎம்டிபியில் 2022ஆம் ஆண்டிற்கான டாப் 10 லிஸ்டில் நடிகர்களில் நடிகர் தனுஷ் முதலிடத்தை பிடித்துள்ளார் அது குறித்த தகவல் தற்பொழுது வெளியாகி உள்ளது உலக அளவில் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்கள் வெளியாகி வருகிறது எனவே அந்த படங்களை தர மதிப்பீடு செய்வது வழக்கம்.
அந்த வகையில் இந்த பட்டியலனை ஆண்டுதோறும் ஐஎம்டிபி வெளியீட்டு வருகிறது. அந்த வகையில் இந்த 2022ஆம் ஆண்டுக்கான பாப்புலராக இருந்த டாப் 10 இந்திய நட்சத்திரங்களின் பட்டியலை வெளியிட்டு இருக்கிறது மேலும் ஐஎம்டிபி தளத்தின் மூலம் எடுக்கப்பட்ட இந்த லிஸ்ட் தற்பொழுது வெளியாகி உள்ளது.
இந்த பட்டியலில் நடிகர் தனுஷ் முதல் இடத்தை பிடித்துள்ளார் அதாவது தனுஷ் நடிப்பில் இந்த ஆண்டு நான்கு திரைப்படங்கள் வெளியானது அந்த வகையில் முக்கியமாக கோலிவுட்டில் ரூசோ பிரதர்ஸ் இயக்கத்தில் தி கிரே மேன் திரைப்படம் இந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றினை கண்டது. மேலும் இதனை தொடர்ந்து தமிழில் மாறன், திருச்சிற்றம்பலம், நானே வருவேன் திரைப்படங்கள் வெளியானது.
இவரைத் தொடர்ந்து நடிகைகள் ஆலியா பட் மற்றும் ஐஸ்வர்யா ராய் இருவரும் 2 மற்றும் 3 இடத்தினை பிடித்துள்ளார்கள். 4வது இடத்தினை ஆர்ஆர் ஆர் பட நாயகன் ராம்சரண், ஐந்தாவது இடத்தினை சமந்தாவும் பிடித்துள்ளார் மேலும் இவர்களை தொடர்ந்து பாலிவுட் நட்சத்திரங்களான ஹிருத்திக் ரோஷன், கியாரா அத்வானி ஆகியோர்கள் 6 மற்றும் 7வது இடத்தினை பிடித்துள்ளார்கள்.
மேலும் அடுத்ததாக தெலுங்கு முன்னாடி நடிகர் ஜூனியர் என்டிஆர் மற்றும் அல்லு அர்ஜுனன் ஆகியோர்கள் 8, 9 வது இடத்தினை பிடித்துள்ளார்கள். கேஜிஎப் ஹீரோ யாஷ் இதில் 10வது இடத்தினை பிடித்துள்ளார். இவ்வாறு தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்து வரும் தனுஷ் முதல் இடத்தை பிடித்துள்ளார் இவரை அடுத்து எந்த தமிழ் நடிகரும் இந்த பட்டியலில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.