நடிகர் தனுஷ் சினிமா உலகில் ஆரம்பத்தில் பல அவமானங்களையும், அசிங்கத்தையும் அவர் கண்டு இருக்கிறார் இருப்பினும் தனக்கான இலக்கு என்ன என்பதை சரியாக புரிந்து ஓடியதால் இப்போ உச்ச நட்சத்திரமாக ஜொல்லிக்கிறார். தான் மட்டும் சினிமா உலகில் வளராமல் தன்னை சுற்றி இருப்பவர்களும் வளர வேண்டும் என்பதற்காக பலருக்கு வாய்ப்பை கொடுத்து உயர்த்தி உள்ளார்.
அந்த வகையில் அனிருத், சிவகார்த்திகேயனை கூறலாம். குறிப்பாக சிவகார்த்திகேயன் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை பக்கம் வந்தவார் அவருக்கு சரியான அங்கீகாரம் கொடுத்து அவரை படிப்படியாக சினிமாவில் உயர்த்தியவர் நடிகர் தனுஷ் தான் அது எல்லோரும் அறிந்த விஷயம் ஆனால் சில பிரச்சனை காரணமாக இருவரும்..
தற்போது இணைந்து பணியாற்றாமல் பிரிந்து உள்ளனர். இவர்கள் இருவரும் கடைசியாக எதிர் நீச்சல் படத்தில் சேர்ந்து பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு இருவரும் தனித்தனியாக சினிமாவில் ரொம்ப கஷ்டப்பட்டு தனக்கான ஒரு இடத்தை பிடித்து ஓடிக் கொண்டிருக்கின்றனர். அதிலும் தனுஷின் வளர்ச்சியே மிகப்பெரிய அளவில் இருக்கிறது.
தற்பொழுது கூட திருச்சிற்றம்பலம், நானே வருவேன், பார்ட்டி ஆகிய படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன அண்மையில் திருச்சிற்றம்பலம் படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது அதில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர் அவர்களில் ஒருவராக வெற்றிமாறனும் கலந்து கொண்டார் அப்பொழுது சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
தனுஷ் என்னிடம் உங்களது உதவி இயக்குனர்களில் யாரேனும் காமெடி கதைகள் வைத்திருந்தால் சொல்லுங்கள் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க வேண்டும் என தனுஷ் கூறினாராம் பின் இயக்குனர் வெற்றிமாறன் உதவி இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் எதிர்நீச்சல் காக்கிச்சட்டை திரைப்படங்களில் சிவகார்த்திகேயன் நடித்தாராம் இந்த இரண்டு கதைகளும் நடிகர் தனுஷுக்கு முதலில் கூறப்பட்ட கதைகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.