தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து ஓடிக் கொண்டிருப்பவர் நடிகர் தனுஷ் இவர் திருச்சிற்றம்பலம், நானே வருவேன் ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து வாத்தி, கேப்டன் மில்லர் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார் குறிப்பாக கேப்டன் மில்லர் திரைப்படத்தை பெரிய அளவில் எதிர்நோக்கி இருக்கின்றனர்
ஏனென்றால் இது 80, 90 கால கட்டங்களில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவாக்குவதாக கூறப்படுகிறது இந்த திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார் அருண் மாதேஸ்வரன் இந்த திரைப்படத்தை இயக்கிய வருகிறார். இந்த படத்தில் தனுஷ் மற்றும் பிரியங்கா அருள் மோகனுடன்..
கைகோர்த்து சந்திப் கிஷன், நிவேதிதா சதீஷ், ஜான் கொக்கன் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து வருகின்றனர். இந்த திரைப்படத்தை தொடர்ந்து தனுஷ் மீண்டும் சேகர் கமுல்லா உடன் கைகோர்த்து ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்
இந்த திரைப்படத்திற்கான அறிவிப்பு அடுத்த வருடம் ஜூலை மாதத்தில் அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது. ஆனால் அதற்கு முன்பாக கதைக்கு ஏற்றப்படி நடிகர், நடிகைகளை படக்குழு தேர்வு செய்து வருகிறது அந்த வகையில் தனுஷுக்கு வில்லனாக பாலிவுட் நடிகர் ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாம் அந்த நடிகர் வேறு யாரும் அல்ல..
கே ஜி எஃப் படத்தில் வில்லனாக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்த சஞ்சய் தத் தான்.. தனுஷ் படத்தில் நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம் தனுஷுடன் நடிகர் சஞ்சய் நடிக்க 10 கோடி சம்பளம் கேட்டு வருவதாக கூறப்படுகிறது. இதற்கான அறிவிப்பு வெகு விரைவிலேயே வரும் என சொல்லப்படுகிறது.