பட வாய்ப்பு கேட்டு போன தனுஷ்..! கண்டுகொள்ளாமல் கெத்து காட்டிய மணிரத்தினம்.? உண்மை சொன்ன பிரபலம்..!

manirathianam
manirathianam

இயக்குனர் மணிரத்தினம் தமிழ் சினிமா உலகில் பல சிறந்த படைப்புகளை கொடுத்து அசத்தியிருக்கிறார் இருந்தாலும் தனது கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் நாவலை தழுவி பொன்னியின் செல்வன் படத்தை எடுத்துள்ளார் அதை இரண்டு பாகங்களாக வெளியிட திட்டமிட்டு இருக்கிறார் அதில் முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி கோலாகலமாக திரையரங்குகளில் வெளியானது.

படம் எப்படி இருக்குமோ என பலரும் யோசித்து இருந்த நிலையில் அவர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கும் வகையில் படம் பிரம்மாண்டமாக சூப்பராக இருந்ததால் அனைவரும் நல்ல விமர்சனத்தையே கொடுத்து வருகின்றனர் ஆதன்காரணமாக இந்த படம் தற்பொழுது வெற்றி நடை கண்டு வருகிறது. இதுவரை மட்டுமே பொன்னியின் செல்வன் திரைப்படம் இரண்டு நாள் முடிவில் 150 கோடிக்கு மேல் வசூல் அள்ளி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வருகின்ற நாட்கள் விடுமுறை என்பதால் இந்த படத்தின் வசூல் அதிகரிக்கும் என கருதப்படுகிறது. இந்த படத்தை எதிர்த்து தனுஷின் நானே வருவேன் திரைப்படம் ஒரு நாளைக்கு முன்னாடியே வெளியானது இருப்பினும் பொன்னியின் செல்வன் படத்துக்கு ஈடு கொடுக்க முடியாததால் நானே வருவேன் படத்தில் வசூல் குறைந்து ஓடிக்கொண்டிருக்கிறது. ஒரே பிரம்மாண்ட பட்ஜெட் படத்துடன் தனுஷ் படம் வெளியானது தேவையில்லாத ஒரு விஷயம் என பலரும் கூறி வந்தனர்.

இதற்கு கலை புலித்தானு அவர்கள் கூறியது நாங்கள் பொன்னியின் செல்வன் படத்தோட போட்டி போடவில்லை என கூறி பதிலளித்தார் இப்படி இருக்கின்ற நிலையில் தனுஷ் மற்றும் மணிரத்தினம் பற்றி ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதாவது சில ஆண்டுகளுக்கு முன்பு தனுஷ் மணிரத்தினம் அலுவலகத்திற்கு வாய்ப்பு கேட்டு சென்று இருக்கிறார் அப்பொழுது மணிரத்தினம் தனுசை சரியாக கவனிக்கவில்லையாம் மேலும் பட வாய்ப்பு குறித்தும் பேசவில்லையாம்..

இதனை தனுஷ் அவமானமாக கருதி கொண்டதாக கூறப்படுகிறது அதே போல் மணிரத்தினம் ராவணன் திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க தனுஷை அழைத்திருக்கிறார் ஆனால் தனுஷ் பழைய ஞாபகங்களை நினைவில் வைத்து ராவணன் திரைப்படத்தில் நடிக்க மறுத்திருக்கிறார் என கூறப்படுகிறது. இந்த செய்தியை பிரபல பத்திரிகையாளர் செய்யார் பாலு சமீபத்தில் பேட்டி ஒன்றில் பகிர்ந்து உள்ளார். ஏற்கனவே பொன்னியின் செல்வன் படத்தை எதிர்த்து தனுஷ் போட்டியிட்டு உள்ளதாக விவாதங்கள் பரவி வருகின்றன இப்பொழுது இந்த செய்தியும் சேர்ந்து உள்ளதால் என்ன ஆகப் போகிறது என்று தெரியவில்லை..