விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இதன் மூலம் தொகுப்பாளராக சில வருடங்கள் பணியாற்றி தற்பொழுது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கொடிகட்டி பறந்து வருபவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் தனது விடாமுயற்சியினால் வளர்ந்துள்ள இவருக்கு ரசிகர்கள் மத்தியில் தனி ஒரு இடம் இருந்து வருகிறது.
மேலும் இவர் நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களும் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. சிவகார்த்திகேயன் ஆரம்ப காலகட்டத்தில் சினிமாவில் இந்த அளவிற்கு வளர்ந்து விட்டவர் நடிகர் தனுஷ் தான் என இயக்குனர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.
தனுஷ் நடிப்பில் வெளிவந்த 3 திரைப்படத்தின் மூலம் இருவரும் நெருங்கிய நண்பர்களாக பழகிய நிலையில் எதிர்நீச்சல் திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை கொடுத்தார். அதன் பிறகு அதே சமயத்தில் அனிருத்தம் இவர்களுடைய நண்பர்களாக மாறினார் எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும் மூவரும் ஒன்றாக செல்வதை வழக்கமாக வைத்து இருந்தனர்.
இந்நிலையில் சமீபத்தில் தனுஷ் நடித்து முடித்துள்ள திரைப்படம் தான் திருச்சிற்றம்பலம் சமீபத்தில் திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்றது அதில் இயக்குனர் செல்வராகவன் திடீரென்று தனுஷ் ஒரு நாள் என்னிடம் உங்களது அசிஸ்டன்ட் யாராவது காமெடி கதை வைத்திருக்கிறார்களா என்று கேட்டார். நான் எதற்காக என்று கேட்டேன் அதற்கு உங்களுக்கு காமெடி கதை பிடிக்கும் என்று தான் கேட்டேன்.
மேலும் அந்த கதை சிவகார்த்திகேயன் எனக்கு தேவை என்று கூறினார் சிவகார்த்திகேயன் திறமையான நடிகர் அவர் சூப்பர் ஸ்டாராக வருவதற்கு அனைத்து தகுதிகளும் இருக்கிறது என்று என்னிடம் கூறினார்.இந்த தகவலை அறிந்த சிவகார்த்திகேயன் ரசிகர்கள் தனுஷிற்கு வாழ்த்து தெரிவித்து வருகிறது. இவ்வாறு சிவகார்த்திகேயன் தற்பொழுது தென்னிந்திய சினிமாவில் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து கலக்கி வந்தாலும் அதற்கு முக்கியமான காரணம் தனுஷ் தான் என்பது குறிப்பிடத்தக்கது.