தனுஷ் நடிப்பில் இயக்குனர் வேல்ராஜ் இயக்கத்தில் வெளியாகிய திரைப்படம் தான் வேலையில்லா பட்டதாரி இந்த திரைப்படத்தில் தனுஷுடன் இணைந்து அமலாபால், விக்னேஷ் சிவன், விவேக், சரண்யா பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்கள் இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது.
வசூல் ரீதியாக வெற்றி பெற்ற இந்த திரைப்படத்தில் நயன்தாராவின் காதலரும் இயக்குனருமான விக்னேஷ் சிவன் தனுஷிற்கு நண்பனாக நடித்திருந்தார். நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் நீண்ட காலமாக காதலித்து வருகிறார்கள் இவர்கள் இருவரும் அடிக்கடி கோயில்கள் வெளிநாடுகளுக்கு சென்று புகைப்படம் எடுத்து புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்கள்.
அதுமட்டுமில்லாமல் சமீபத்தில்கூட நயன்தாராவின் அப்பா அப்பாவின் பிறந்தநாளுக்கு நேரில் சென்று வாழ்த்து கூறினார் விக்னேஷ் சிவன். அந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரல் ஆனது. இந்தநிலையில் வேலையில்லா பட்டதாரி படப்பிடிப்பின்போது இயக்குனர் வேல்ராஜ் மற்றும் தனுஷ், விக்னேஷ் சிவன் மூவரும் நீச்சல் குளத்தில் சென்று ஆனந்தமாய் குளியல் போட்டு உள்ளார்கள்.
அந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது இதைப்பார்த்த ரசிகர்கள் பலரும் தனுசுடன் இவ்வளவு நெருக்கமாக விக்னேஷ் சிவன் இருக்கிறாரா. இது எங்கே போய் முடியப் போகுதோ என சந்தேகத்தில் இருக்கிறார்கள்.
ஏனென்றால் தனுஷ் சமீபத்தில் மனைவியை விவாகரத்து செய்யப் போவதாக சமீபத்தில் அறிவிப்பை வெளியிட்டார் அந்த தகவல் காட்டுத்தீ போல் சினிமா உலகில் பரவியது. அதுமட்டுமில்லாமல் தனுஷிற்கு பலரும் அறிவுரை கூறி வந்தார்கள் இந்த நிலையில் தற்போது இந்த புகைப்படம் வெளியாகி வைரளாகி வருகிறது.
viknesh shivan