தனுஷ், சிவகார்த்திகேயன் படங்களுக்கு ஆப்பு வைத்த சினிமா நடிகைகள்.? படம் அவ்வளவு தானோ பாடாய் படும் தயாரிப்பாளர்கள்.

danush and sivakarthikeyan 2
danush and sivakarthikeyan 2

சினிமா உலகில் சமீபகாலமாக பிரபலங்கள் பலரும் போதை பொருள் பயன்படுத்துவதாக செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது சிபிஐ மற்றும் காவல்துறையினர் அந்த விசாரணையை நோண்ட ஆரம்பித்து உள்ளனர். தற்போது பல பிரபலங்கள் அதில் சிக்கி உள்ளதால் அவர்களை ஒவ்வொருவராக கைது செய்து வருகிறது.

அந்த வகையில் கன்னடத் திரையுலகைச் சேர்ந்த ராகினி திவேதி மற்றும் நடிகை சஞ்சனா கல்ராணி ஆகியோரை ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில் தற்பொழுது விசாரணை மேற்கொண்டு அவர்கள் மீது நடந்த தொடங்கி உள்ளது இதன் காரணமாக பல பிரபலங்கள் சீக்கிரம் வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில் தற்பொழுது ஒரு புதிய நடிகர் நடிகைகள் சிக்கி உள்ளனர்.

அந்த வகையில் நடிகை சாரா அலி கான் மற்றும் ரகுல் பிரீத் சிங் ஆகியோர் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கூறப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இதனையடுத்து அவர்கள் எப்போது வேணாலும் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிய வந்தது.

இதனால் தனுஷ் நடிக்கும் அத்ராங்கி ரே இப்படத்தில் நடிக்கும் கதாநாயகி சாரா அலி கான் நடிக்க இருந்த நிலையில் இந்த விவகாரத்தில் சிக்கி உள்ளதால் அவரது படம் தற்போது கேள்விக்குறியாகி இருந்து வருகிறது மேலும் சிவகார்த்திகேயன் நடிக்கும் அயாலன் படத்தில் கதாநாயகி ரகுல் பிரீத் சிங் நடிகை இருந்துள்ளார் இதுவும் தற்போது கேள்விக்குறியாக இருந்து வருகிறது.

இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டாலோ அல்லது விசாரணை முடியும் வரை இவர்கள் வெளியூர் செல்ல கூடாது என காவல்துறையினர் கூறியுள்ளனர் இதனால் தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் படங்களில் என்னாகும் என்று தெரியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.