மாரி 2 திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் தனுஷ்க்கு ஜோடி போடும் சாய் பல்லவி.!

MAARI 2
MAARI 2

ஒரு சில நடிகைகள் சினிமாவிற்கு அறிமுகமான தனது முதல் படத்திலேயே சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதற்க்கான வாய்ப்புகளை பெறுபவர்களும் இருக்கிறார்கள் அதோடு இவர்கள் தங்களுக்கு என்று ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி உள்ளார்கள்.

அந்த வகையில் மலையாளத்தில் வெளிவந்த பிரேமம் படத்தின் மூலம் கதாநாயகியாக சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை சாய் பல்லவி. இதுதான் இவரின் முதல் படமாக இருந்தாலும் மலையாள ரசிகர்கள் மட்டுமல்லாமல் தமிழ் ரசிகர்கள் உள்ளிட்ட ஏராளமான அவர்களையும் கவர்ந்தவர்.

அதன்பிறகு இவர் தியா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.இத்திரைப்படத்தை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளிவந்த மாரி 2 திரைப்படத்தில் நடித்திருந்தார் கடைசியாக சூர்யாவுடன் இணைந்து NGK திரைப்படத்தில் நடித்திருந்தார்.

தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழியில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து மிகவும் பிஸியாக இருந்து வருகிறார். இந்நிலையில் தற்பொழுது இவர் மீண்டும் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார் என்ற தகவல் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் தனுஷ் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து வருகிறார் அதோடு இவர் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு குவிந்து வருகிறது. எனவே தற்பொழுது தெலுங்கில் அறிமுகமாக உள்ளார்.அறிமுகமாக உள்ள இத்திரைப்படத்தில் சாய் பல்லவி தான் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார்.

இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கவுள்ள இத்திரைப்படத்தை பிரபல டோலிவுட் இயக்குனர் சேகர் கமுலா இயக்கவுள்ளார்.இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகவுள்ளது.