எனக்கும் , தனுஷும் கடந்த 10 வருடங்களாக பல கணக்கு இருக்கு.? அதில் ஒரு பிரச்சனை ஜெகேமே தந்திரம்.? தயாரிப்பாளர் அதிரடி பேட்டி.

jegamae-thanthiram

தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஜெகேமே தந்திரம் இத்திரைப்படம் வருகின்ற ஜூன் 18-ஆம் தேதி நெட்பிளிக்ஸ் OTT தளத்தில் வெளியாக உள்ளது இந்த படம் 17 மொழிகளில் வெளியாகி விருந்து படைக்க உள்ளது இதனால் இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போது உலக அளவில் இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தின் டிரைலர் வெளிவந்து ரசிகர்களை துள்ளாட்டம் போட வைத்தால் இந்த படத்தை ஆவலாக பார்க்க தனுஷ்  ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். ஜெகேமே தந்திரம் படம்  முதன்முதலில் தியேட்டரில் ரிலீஸ் ஆக தான் முடிவு செய்தனர் ஆனால் தற்போது நடக்கின்ற சூழல் சரியில்லாத தால் நேராக ஓட்டிட்டு தளத்திற்கு மாறியது.

இதனால் தயாரிப்பாளருக்கும், தனுஷுக்கும் பல பிரச்சனைகள் வந்தது. இந்த நிலையில் ஜகமே தந்திரம் படத்தின் புரமோஷன் பணிகளில் ஈடுபட்டிருந்த தயாரிப்பாளர் சசிகாந்த் அவர்களிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டது அப்பொழுது தனுஷோட மோதல் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதில் கூறியது கடந்த நான்கு மாதங்களாக இது தொடர்பாக சமூக வலைத்தளத்தில் பரவும் செய்திகள் குறித்து பலரும் பலவிதமாக கூறுகின்றனர்.

எதிர்மறை இல்லாமல் நாம் தயாரித்துள்ள படம் உலக அளவில் போக போகிறது என்பதில் மட்டுமே இருக்கிறேன். நானும் தனுஷும் கடந்த 10 ஆண்டுகளாக நல்ல நண்பர்களாக இருக்கிறோம் என்ற விஷயம் பலருக்கும் தெரியாது இந்த பட விவகாரத்தில்எனக்கும் தனுஷிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது தனுஷும் இந்த படத்தின் நல்லதுக்கு தான் பேசினார்.

ஜகமே தந்திரம் திரையரங்கில் ரிலீஸ் ஆனால் நன்றாக இருக்கும் என்று அவர் சொன்னது சரியான கருத்து தான் ஆனால் கமர்ஷியல் ரீதியாக கடந்த ஓராண்டாக இத்தகைய பெரிய பட்ஜெட் படத்தை வைத்துக் கொண்டிருப்பது எவ்வளவு வட்டி என்பது எனக்கு தான் தெரியும் இது தொடர்பாக நிறைய பிரச்சனைகள் இருக்கின்றன தற்போது இந்த படம் உலக அளவில் வெளியாக உள்ளது.

jegamae-thanthiram
jegamae-thanthiram

இப்படம் குறித்து அமெரிக்காவில் எல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார்கள் ஒரு தயாரிப்பாளராக அது எனக்கு சந்தோஷத்தை தருகிறது இவ்வாறு கூறினார் சசிகாந்த்.