தியேட்டரில் திருச்சிற்றம்பலம் திரைப்படத்தினை ரசிகர்களுடன் இணைந்து பார்த்த தனுஷ் மற்றும் அனிருத்.! வைரலாகும் வீடியோ..

தனுஷ் மற்றும் அனிருத் கூட்டணியில் பல வருடங்கள் கழித்து தற்பொழுது திருச்சிற்றம்பலம் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. அதாவது தனுஷ் நடிப்பில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் மித்ரன் ஜகவர் இயக்கத்தில் உருவான திரைப்படம் தான் திருச்சிற்றம்பலம்.

இந்தத் திரைப்படம் ஆகஸ்ட் 18ஆம் தேதி ஆன இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. காலை 8 மணி முதல் காட்சி திரையரங்குகளில் திரையிடப்பட்டது. எனவே நடிகர் தனுஷ் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் இருவரும் இணைந்து சென்னை கோயம்பேடு ரோகிணி திரையரங்குகளில் ரசிகர்களுடன் சேர்ந்து படம் பார்த்து மகிழ்ந்துள்ளனர்.

இவர்கள் வருவதை தெரிந்து கொண்டு ரசிகர்கள் விசில் சத்தம் என ஆரவாரம் கைத்தட்டலோடு அனைவரும் பார்த்து வருகிறார்கள் இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது தனுஷ் மற்றும் அனிருத் இருவரும் இணைந்து ரசிகர்களுடன் பார்த்து மகிழவும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

இந்தத் திரைப்படத்தினை தமிழக உரிமத்தை ரேட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் சார்பில் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கைப்பற்றியுள்ளார். இந்தத் திரைப்படத்தில் படித்தோம் வேலை கிடைக்காத இளைஞன் பல வேலைகளை தேடியும் கிடைக்காத காரணத்தினால் டெலிவரி பாய் வேலையை செய்து வருகிறார். அவ்வப்பொழுது டெலிவரி பாயாக நடித்து வரும் தனுஷ் நித்யா மேனனை சந்திக்க இருவரும் நண்பர்களாகி விடுகிறார்கள்.

இவரைத் தொடர்ந்து தனுஷின் தாத்தாவாக முக்கிய கதாபாத்திரத்தில் பாரதிராஜாவும், அப்பாவாக பிரகாஷ்ராஜ் அவர்களும் நடித்துள்ளார்கள். தனுசுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர், நித்தியா மேனன், ராசி கண்ணா‌ ஆகியோர்கள் நடித்துள்ளனர். இவ்வாறு இவர்களுடைய கூட்டணி மிகவும் அருமையாக இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

dhanush
dhanush

மேலும் இவர்களுடைய அனைத்து கேரக்டர்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனம் கிடைத்துள்ளது இதனை தொடர்ந்து அனிருத் இசையமைத்துள்ள நிலையில் அனைத்து பாடல்களும் வெளியாகி முன்பே சூப்பர் ஹிட்டானது இப்படத்திற்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்ய பிரசன்னா படத்தொகுப்பு செய்துள்ளார்.