தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொல்லிப்பவர் நடிகர் தனுஷ் இவர் அண்மை காலமாக நல்ல நல்ல படங்களை கொடுத்து வருகிறார் அந்த வகையில் திருச்சிற்றம்பலம் படத்தின் வெற்றியை தொடர்ந்து நானே வருவேன் திரைப்படமும் வெளியாகி சூப்பராக ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்தப் படத்தை தொடர்ந்து தனுஷ் கையில் வாத்தி, கேப்டன் மில்லர் ஆகிய திரைப்படங்கள் இருக்கிறது. என்பது குறிப்பிடத்தக்கது. திரை உலகில் வெற்றியைக் கண்டாலும் நிஜ வாழ்க்கையில் தற்போது சறுக்கல்களை சந்தித்துள்ளார். நடிகர் தனுஷ் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்கள் இருவருக்கும் லிங்கா மற்றும் யாத்ரா என இரு மகன்கள் இருக்கின்றனர். தனுஷும், ஐஸ்வர்யாவுடன் 18 வருடம் வாழ்க்கையை என்ஜாய் பண்ணி வாழ்ந்து வந்த நிலையில் சில பிரச்சனைகள் காரணமாக இருவரும் பிரிந்துள்ளனர். இந்த செய்தியை சமூக வலைதள பக்கங்களில் பெரிய அளவில் பரவியது. இவர்கள் இருவரையும் சேர்த்து வைக்க தனுஷ் குடும்பமும் சரி, ரஜினி குடும்பமும் சரி..
பல தடவை முயற்சித்து பார்த்தது ஆனால் எதுவுமே நடக்கவில்லை இதனால் இன்றுவரை இவர்கள் இருவருமே தனித்தனியே இருந்து வருகின்றனர் ஆனால் இவர்கள் இருவரும் வெகு விரைவிலேயே ஒன்றே இருக்கிறார்கள் ஏன் இந்த திடீர் முடிவு என்றால் இவர்கள் இருவரும் பிரிந்து இருப்பது அவர்களது பிள்ளைகளை பெரிதும் பாதித்து வருகிறதாம்..
இதனால் பிள்ளைகளின் நலனுக்காக இருவரும் ஒன்று சேர்ந்து வாழ்க்கையை வாழ இருக்கிறார்களாம் அதற்கான அதிகாரபூர்வமான அறிவிப்புகள் வெகு விரைவிலேயே வரும் என கூறப்படுகிறது. இதை அறிந்த ரசிகர்கள் இப்பொழுது நீங்கள் எடுத்துள்ள முடிவு வரவேற்கத்தக்க ஒன்று எனக்கூறி சீக்கிரம் நீங்கள் சேருங்கள் எல்லாம் நல்லதாகவே நடக்கும் எனக் கூறி வருகின்றனர்.