தமிழ் சினிமாவிற்கு ஹீரோவாக அறிமுகமாகி தற்பொழுது தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என பல்வேறு திறமைகளை வெளிப்படுத்தி கோலிவுட் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்து வருபவர் தான் நடிகை தனுஷ் இவர் கடந்த 2017ஆம் ஆண்டு வெளிவந்த ‘பா பாண்டி’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது.
எனவே இவர் அடுத்தடுத்து திரைப்படங்களில் இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தொடர்ந்து திரைப்படங்கள் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்ததால் இவரால் படங்களை இயக்க முடியவில்லை இப்படிப்பட்ட நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்பொழுது இவர் புதிய திரைப்படம் ஒன்றை இயக்கம் இருப்பதாகவும் அந்த திரைப்படம் குறித்த தகவல் விரைவில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் தற்பொழுது வெளியாகி உள்ள தகவலின் படி தனுஷ் இயக்கம் இருக்கும் அந்த படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் இந்த படத்தின் அறிவிப்பு மிகவும் விரைவில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் விஷ்ணு விஷால் மற்றும் எஸ்.ஜே சூர்யா இருவரும் நடிக்க இருப்பதாகவும் இதில் தனுஷ் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் தனுஷின் முன்னாள் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது லால் சலாம் திரைப்படத்தினை இயக்கி வரும் நிலையில் இந்த படத்தில் விஷ்ணு விஷால் ஹீரோவாக நடித்த வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது இவரை அடுத்து விக்ராந்த் முக்கிய கதாபாத்திரத்திலும், நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்திலும் நடித்து வருகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு சமீப காலங்களாக மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற வரும் நிலையில் விரைவில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் இயக்கும் இந்த படங்களுக்கு ஒற்றுமை இருப்பதாக கூறப்படுகிறது அதாவது தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் நடிக்கும் திரைப்படங்களில் ஹீரோவாக விஷ்ணு விஷால் தான் நடிக்கப் போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.