விவாகரத்திற்கு குட் பாய்.! சகல வசதிகளுடன் கூடிய பிரம்மாண்ட வீட்டிற்கு குடி போக போகும் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா.!

dhanush
dhanush

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் நடிகர் தனுஷ் இவர் தற்போது இயக்குனர் செல்வ ராகவன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான நானே வருவேன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று படம் தோல்வி அடைந்தது. இதனை அடுத்து நடிகர் தனுஷ் அவர்கள் அடுத்ததாக கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த திரைப்படம் கோடை விடுமுறை முன்னிட்டு வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் கடந்த ஆண்டு விவாகரத்து செய்யப் போவதாக ஒரு அறிக்கை வெளியிட்டு இருந்தனர். அதுமட்டுமல்லாமல் இவர்கள் அறிக்கையை வெளியிட்டுப் பின்னர் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர் இதனால் மன வருத்தத்தில் இருந்த அவரது ரசிகர்கள் நீங்கள் விவாகரத்து தர வேண்டாம் என ட்விட்டரில் பதிவிட்டு வந்தனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இருவரும் சேர்ந்து வாழ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது அதன்படி இவர்கள் இருவரும் விவாகரத்து ரத்து குறித்து அதிகாரப்பூர் அறிவிப்பை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது இந்த நிலையில் நடிகர் தனுஷ் அவர்கள் சென்னையில் ஒரு புதிய வீடு கட்டி வருவதாக கூறப்படுகிறது.

வீட்டின் முழு பணிகளும் ஜனவரி மாதத்துடன் முடியவ உள்ளதாகவும். தனது மனைவியுடன் அந்த வீட்டிற்கு குடிபோக இருக்கிறாராம் நடிகர் தனுஷ். இதன் மூலம் வருகின்ற ஜனவரி மாதம் இருவரும் தங்களுடைய விவாகரத்தை ரத்து செய்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இவர்கள் இருவரும் இணைவதால் நடிகர் ரஜினி காந்த் அவர்கள் மிகவும் சந்தோஷமாக இருப்பதாகவும் இதனால் பல படங்களில் கமிட் ஆகி உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இது பற்றி தனுஷ் தரப்பில் இருந்தும் ஐஸ்வர்யா தரப்பில் இருந்தும் எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடாமல் இருக்கிறார்கள்.