விபத்துக்கள் ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கிறது என ரசிகர்களுக்கு அறிவுரை கூறிய நடிகர் தனுஷ்.!

dhanush-
dhanush-

சினிமா உலகில் ஒரு ஹிட் படம் கொடுத்து விட்டாலே நடிகர்கள் அலப்பறை பண்ணுவது வழக்கம்.. ஆனால் இதிலிருந்து முற்றிலுமாக மாறுபட்டவர் நடிகர் தனுஷ் தொடர்ந்து வரிசையாக ஹிட் படங்களை கொடுத்தாலும் சைலண்டாக திரையுலகில் தென்படுகிறார் இவர் நடிப்பில் அண்மையில் வெளிவந்த திருச்சிற்றம்பலம், நானே வருவேன் போன்ற படங்கள் நல்ல வெற்றியை பதிவு செய்தது.

அதனைத் தொடர்ந்து வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகி உள்ள வாத்தி திரைப்படத்தில் தனுஷ் நடித்துள்ளார் இதில் அவர் பல கெட்டப்புகள் போட்டு உள்ளதாக சொல்லப்படுகிறது. தனுஷ் இணைந்து சம்யுக்தா மேனன், சாய்குமார், சமுத்திரக்கனி, ஆடுகளம் நரேன், இளவரசு, ஷா ரா..

மற்றும் பல முன்னணி நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். வாத்தி படத்தின் படபிடிப்பு அனைத்தும் முற்றிலும் முடிந்தாலும். பட ரிலீஸ் தேதி மட்டும் தொடர்ந்து தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது. இப்படி இருக்கின்ற நிலையில் இசை வெளியீட்டு விழா வைத்து திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை உறுதிப்படுத்தி உள்ளது.

ஆம் வருகின்ற பிப்ரவரி 17ஆம் தேதி வாத்தி திரைப்படம் வெளியாக இருக்கிறது இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தனுஷ், நடிகை சம்யுக்தா மேனன் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் விழாவில் கலந்து கொண்டனர் அப்பொழுது பேசிய தனுஷ் படம் குறித்து பேசி இருந்தாலும் கடைசியில் ரசிகர்களுக்கு அறிவுரையும் கொடுத்துள்ளார்.

அதில் அவர் சொன்னது என்னவென்றால்.. எனது வாகனத்தை ரசிகர்கள் பின் தொடர்ந்து வருவதை பார்க்க பயமாக இருக்கிறது உங்களை நம்பி பெற்றோர்கள் இருக்கிறார்கள் வாகனத்தின் பின்னால் வேகமாக வருவதால் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது எனவே அப்படி வராதீர்கள் என தனுஷ் கேட்டுக் கொண்டுள்ளார்.