இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் தமிழ் சினிமா உலகில் பல வெற்றி படங்களை இயக்கி அசத்தியுள்ளார் மேலும் சினிமாவில் அண்மைக்காலமாக நடித்தும் வருகிறார் இவர் கடைசியாக இயக்கிய திரைப்படம் வெந்து தணிந்தது காடு அந்த படம் நல்ல வரவேற்பை பெற்று சூப்பராக ஓடியது இப்படி இருக்கின்ற நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் சில விஷயங்களை அவர் வெளிப்படையாக பேசி உள்ளார்.
2019 ஆம் ஆண்டு தனுஷ், மேகா ஆகாஷ் ஆகியோர் நடிப்பில் என்னை நோக்கி பாயும் தோட்டா திரைப்படம் வெளியானது ஆனால் இந்த படத்தின் படபிடிப்பு 2016 ஆம் ஆண்டு தொடங்கியது தொடர்ந்து சிக்களை சந்தித்ததால் படம் வெளியிட முடியாமல் இழுத்துக் கொண்டே போனது ஒரு வழியாக ஐசரி கணேஷ் கௌதம் மேனனிடம் சில ஒப்பந்தங்கள் போட்டு இந்த திரைப்படத்தை வாங்கி வெளியிட்டார்.
அதில் கௌதம் மேனன் சொல்லி உள்ளது என்னவென்றால்.. நடிகர் சிம்புவை வைத்து நான் படம் பண்ணிவிட்டேன் ஆனால் தனுஷை வைத்து சரியாக படம் பண்ண முடியவில்லை என்று நான் நினைக்கவில்லை தாங்கள் இருவரும் இணைந்து ஒன்றை முயற்சி செய்தோம் ஆனால் அது வேலைக்கு ஆகவில்லை..
அந்த திரைப்படத்தை ஒழுங்காக முடிக்க முடியவில்லை தயாரிப்பாளருக்கும் தனுஷ்கும் சில பிரச்சனைகள் இருந்தது ஆதலால் தனுஷுக்கு அந்த திரைப்படத்தில் நடிக்க சுத்தமாக விருப்பமே இல்லாமல் போனது ஒரு கட்டத்திற்கு மேல் தனுஷை என்னால் சமாதானப்படுத்த முடியவில்லை அவ்வளவு சிக்கலில் தான் அந்த திரைப்படத்தை முடித்தேன் என கூறினார்.
ஆனால் அவரை நான் பழி போட விரும்பவில்லை மீண்டும் அவருடன் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக பண்ணுவேன் என கூறியுள்ளார். இந்த செய்தி தற்போது இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.