தனுஷ் 43 படத்தின் முக்கிய அப்டேட்டை அதிகாரபூவமாக அறிவித்த ஜிவி பிரகாஷ்.! குஷியில் ரசிகர்கள்

தனுஷ் தற்போது அடுத் அடுத்த திரைப்படங்களில் நடித்து வலம் வந்து கொண்டிருக்கிறார் இவரது நடிப்பில் சென்ற வருடம் அசுரன் என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது வெளிவந்த நாளிலேயே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது மட்டுமல்லாமல் நல்ல விமர்சனமும் இந்த படத்திற்கு கிடைத்தது.

மேலும் தனுஷ் தற்போது ஜகமே தந்திரம் மற்றும் கர்ணன் ஆகிய இரண்டு திரைப்படங்களும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது இந்த இரண்டு திரைப்படமும் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது என்று தகவல் கிடைத்துள்ளது.

இதே சமயம் பாலிவுட்டிலும் அந்தராங்கே என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார் தனுஷ்.

dhanush
dhanush

இதனை தொடர்ந்து தனுஷ் 43வது திரைப்படத்தை கார்த்திக் நரேன் இயக்க இருக்கிறார் என்பது பலருக்கும் தெரிந்ததுதான்.அந்தப் படத்திற்காக இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசை அமைத்து வருகிறார்.

மேலும் ஜிவி பிரகாஷ் தனது சமூக வலைதளப் பக்கங்களில் ஒரு தகவலை பகிர்ந்து இருக்கிறார் அந்த தகவல் என்னவென்றால் தனுஷ் 43வது திரைப்படத்திற்கு மூன்று பாடல்களை கம்போஸ் செய்து முடித்து விட்டதாகவும் நான்காவது பாடலையும் தற்பொழுது கம்போஸ்க்கு செய்து வருகிறார் என்றும் தகவலை பதிந்திருக்கிறார் ஜிவி பிரகாஷ்.

இந்த தகவல் தனுஷ் ரசிகர்களுக்கு ஒரே கொண்டாட்டமாக இருக்கிறது.