என் படத்திற்கு மாளவிகா தான் வேண்டும் அடம் பிடித்து தட்டித் தூக்கிய தனுஷ்.! இதொ அதிகாரப்பூர்வ அறிவிப்பு

malavika-mohanan-568

Malavika mohanan : நடிகை மாளவிகா மோகனன் ரஜினி நடிப்பில் வெளியாகிய பேட்ட திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் அதனைத்தொடர்ந்து அடுத்ததாக விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வர வேண்டியது ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலையால் படத்தின் ரிலீஸ் தள்ளிக்கொண்டே போகிறது.

இந்த நிலையில் மாளவிகா மோகனன் அடுத்ததாக தனுஷுடன் இணைந்து நடிக்க இருக்கிறார் என்ற தகவல் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது, நடிகர் தனுஷ் வடசென்னை, அசுரன், பட்டாஸ் ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து கர்ணன் திரைப்படத்தில் ஹிந்தியில் ஒரு திரைப் படத்திலும் நடித்து வருகிறார்.

இதனைத் தொடர்ந்து தனுஷ் தன்னுடைய 43வது திரைப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றயிருக்கிறார், சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்துடன் இரண்டு திரைப்படங்களில் கமிட்டாகியுள்ளார் அதில் ஒரு திரைப்படம்தான் தனுஷ் 43.

இந்த திரைப்படத்தை துருவங்கள் பதினாறு மாபியா ஆகிய திரைப்படங்களை இயக்கிய கார்த்திக் நரேன் இயக்க இருக்கிறார் என்றும் படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார் என்ற தகவல் ஏற்கனவே வெளியானதுதான்.

ஆனால் படத்தில் ஹீரோயின் யார் என்ற தகவல் வெளியாகாமல் இருந்தது இந்த நிலையில் தற்பொழுது  படத்தில் மாளவிகா மோகனன் நடிகையாக கமிட்டாகி உள்ளது ரசிகர்களை குஷியை ஏற்படுத்தியுள்ளது, மாளவிகா மோகனன் கூறியதாவது.

நீங்கள் பல திரைப்படங்களை தயாரித்து உள்ளீர்கள் அனைத்தும் அற்புதமாக இருந்தது உங்களுடன் இணைவதில் மிக்க மகிழ்ச்சி என தனது சந்தோஷத்தை சமூக வலைதளத்தின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.

இதோ அவரின் பதிவு.

malavika mohanan
malavika mohanan