நடிகர் தனுஷ் வெற்றிமாறனுடன் நான்கு முறை கூட்டணி வைத்துள்ளார் இவர்கள் கூட்டணி பற்றி நாங்கள் சொல்லி தெரிய வேண்டியதில்லை இவர்கள் கூட்டணியில் வெளியாகிய திரைப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது அனைவருக்கும் தெரிந்ததுதான்.
தனுஷ் வெற்றிமாறன் கூட்டணியில் ஆடுகளம், பொல்லாதவன், வடசென்னை, அசுரன் ஆகிய திரைப்படங்கள் வெளியாகியது, இந்த திரைப்படங்கள் அனைத்தும் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றிபெற்றது. இந்தநிலையில் தனுஷ் ஏற்கனவே மூன்று திரைப்படங்களில் பணியாற்றிய இயக்குனர் ஒருவருடன் கூட்டணி வைக்க இருக்கிறார் நான்காவது முறையாக.
இந்த செய்தி ரசிகர்களிடையே கொஞ்சம் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது ஏனென்றால் இந்த இயக்குனரின் படத்தில் தனுஷ் யாரடி மோகினி, குட்டி, உத்தமபுத்திரன், ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார் இதில் யாரடி நீ மோகினி என்ற திரைப்படம் மட்டும்தன் வெற்றியை பெற்றது. மற்ற திரைப்படங்கள் திரையரங்கில் சுமாராகத்தான் ஓடியது.
இதில் உத்தம புத்திரன் திரைப்படம் விவேக் காமெடி ரசிகர்களிடையே பெரிதும் பாராட்டப்பட்டது, இந்த நிலையில் நான்காவது முறையாக மித்ரன் ஜவஹர் அவர்களுக்கு தனுஷ் வாய்ப்பு கொடுத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது, இந்த தகவலை பிரபல பத்திரிக்கையாளர் பிஸ்மி தனது யூடியூப் சேனலில் தெரிவித்துள்ளார்.
இந்த திரைப்படத்திற்கு தற்காலிகமாக தனுஷ் 44 என பெயரிடப்பட்டுள்ளது படத்தை சன் பிக்சர் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. ஆனால் இவர்கள் கூட்டணியில் உருவாகும் திரைப்படத்திற்கு ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பு எதுவும் இல்லை.
அதேபோல் மித்ரன் இயக்கத்தில் வெளியாகிய யாரடி மோகினி திரைப்படம் வெற்றி பெற்றாலும் அந்த திரைப்படத்தின் கதை செல்வராகவன் கதை என்பது குறிப்பிடத்தக்கது, இதற்கு முன் தனுஷ் சத்யஜோதி கூட்டணியில் முண்டாசுப்பட்டி இயக்குனர் ராம்குமாருக்கு வாய்ப்பளித்து பிறகு திடீரென தனுஷ் அந்த திரைப்படத்தில் கார்த்திக் நரேனுக்கு கொடுத்தார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.