பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய தனலட்சுமிக்கு இவ்வளவு சம்பளமா.?

bigg-boss-6
bigg-boss-6

விஜய் டிவியில் தற்பொழுது பிக்பாஸ் சீசன் 6வது நிகழ்ச்சி மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்பொழுது இந்நிகழ்ச்சியின் இறுதி கட்டத்தை நோக்கி போட்டியாளர்கள் சென்று கொண்டிருக்கிறார்கள் மேலும் அனைத்து போட்டியாளர்களும் இந்நிகழ்ச்சியில் தங்களை தக்க வைத்துக் கள்ள வேண்டும் என்பதற்காக கடுமையாக விளையாடி வருகிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் மக்கள் மத்தியில் இந்நிகழ்ச்சியில் யார் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. மேலும் இவர்களுடைய கருத்தின் படி விக்ரமன் தான் பிக்பாஸ் சீசன் ஆறாவது நிகழ்ச்சியின் வெற்றியாளர் என பலரும் கூறி வருகிறார்கள் மேலும் இவரும் தன்னுடைய சிறந்த விளையாட்டுத் திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.

இப்படிப்பட்ட நிலைகளின் பிக்பாஸ் நிகழ்ச்சி 21 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட நிலையில் வாரம் தோறும் மக்கள் மத்தியில் குறைவான வாக்குகளை பெற்று ஒரு ஒரு போட்டியாளர்களாக வெளியேறி வந்தார்கள். மேலும் ஆயிஷா, ராம் இருவரும் ஒரே வாரத்தில் அடுத்தடுத்து எலிமினேஷன் ஆனார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே இதனை எடுத்து தற்பொழுது இந்நிகழ்ச்சி 75 நாட்களைக் கடந்து மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் யாரும் எதிர்ப்பாராத விதமாக தனலட்சுமி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி உள்ளார். யாருக்கும் மரியாதை கொடுக்காமல் எப்பொழுது பார்த்தாலும் கத்தி வந்தவர் தான் தனலட்சுமி.

இப்படிப்பட்ட நிலையில் தற்போது இவர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி உள்ள நிலையில் இவருடைய சம்பளம் குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளது அதாவது பிக்பாஸ் வீட்டில் இருப்பதற்காக தனலட்சுமிக்கு ஒரு நாளைக்கு ரூபாய் 11 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை சம்பளம் தந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இந்த சம்பள விபரம் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.