அசீமை அவன், இவன் எனக் கண்டபடி திட்டும் தனலட்சுமி.! இதனை கண்டிப்பாக கமல் கேட்க வேண்டும்.. ஆதங்கத்தில் ரசிகர்கள்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொடர்ந்து அனைத்து போட்டியாளர்களும் தங்களுடைய சிறந்த விளையாட்டுத் திறமையை வெளிப்படுத்தி வருகிறார்கள். இப்படிப்பட்ட நிலைகள் கடந்த வாரம் நீயும் பொம்மை.. நானும் பொம்மை டாஸ்க் பெற்றுகரமாக நடந்து முடிந்தது இந்த டாஸ்கின் மூலம் பலருடைய உண்மையான முகமும் வெளிவந்தது மேலும் கமல் உட்பட போட்டியாளர்கள் வர அனைவரும் அசீமை விமர்சித்து இருந்தார்கள்.

எனவே அசீம் இந்த வாரம் தன்னுடைய வாயை கொஞ்சம் அடக்கிக் கொண்டு இருக்கிறார். இந்நிலையில் இந்த வாரம் தற்போது புதிய டாஸ்க்‌ ஒன்று நடைபெற்ற வருகிறது. இதுவும் மிகவும் சுவாரசியமாக இருந்து வரும் நிலையில் ஆரம்பமான முதல் கட்டமே சண்டை ஆரம்பித்து இருக்கிறது. அது குறித்த ப்ரோமோ வீடியோக்கள் தான் தற்பொழுது வெளியாகி உள்ளது.

இப்படிப்பட்ட நிலையில் நேற்று தனக்கு மரியாதை தர வேண்டும் என்றும் தன்னிடம் மரியாதையாக பேச வேண்டும் என தனலட்சுமி ராபர்ட் மாஸ்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் அவர் தற்பொழுது அசீமை அவன், இவன் என மரியாதை குறைவாக பேசி இருக்கும் வீடியோ இணையதளத்தில் வெளியாகி உள்ளது. அதாவது அசீமை குறித்து தனலட்சுமி பேசும் பொழுது ஒவ்வொரு வாரமும் ஒரு கண்டன்ட்டை எடுத்துக்கொண்டு அந்த வார இறுதியில் கமலஹாசனிடம் திட்டு வாங்குவது அசிங்கமாக இல்லையா என்று அசீமை கடுமையாக விமர்சனம் செய்கிறார்.

பிறகு இந்த போட்டியை பற்றிய பேசிக் கொண்டிருக்கும் பொழுது அவன், இவன் என்று அசீமை தனலட்சுமி பேசியதை நிவாஷினி பெரிதாக கண்டு கொள்ளவில்லை. இதனைத் தொடர்ந்து நேற்றைய நிகழ்ச்சியின் போது தன்னை நாய் என்று மரியாதை குறைவாக பேசியதாக ராபர்ட் மாஸ்டர்யிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபடும் தனலட்சுமி தன்னிடம் மரியாதையாக பேச வேண்டும் என்று அனைவரையும் வலியுறுத்தினார்.

ஆனால் அவரே இன்று அசீமை அவன் இவன் என்று பேசி இருப்பது மற்ற அனைத்து போட்டியாளர்களுக்கும் எவ்வளவு அவர் மரியாதை தருகிறார் என்பது இதிலேயே தெரிய வருகிறது. மேலும் தொடர்ந்து மிகவும் திமிராக பேசி வரும் தனலட்சுமியை கமலஹாசன் அவர்கள் இந்த வாரம் கண்டிப்பாக கேட்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.