“பிசாசு 2” முடிந்துவிட்டது.! மிஷ்கின் இயக்கும் அடுத்த படத்தின் ஹீரோ இவரா.? சாறு புளிய போராறே..வருத்தப்படும் ரசிகர்கள்.

mysskin
mysskin

தமிழ் சினிமாவில் வித்தியாசமான மற்றும் புதுவிதமான கதையை யோசித்து சிறப்பான படத்தை எடுத்துக் மக்களை மகிழ்வித்து வருவர் இயக்குனர் மிஸ்கின். மேலும் படத்தின் கதைக்கு ஏற்றவாறு எந்த ஒரு அனிமேஷன் ஐயும் பயன்படுத்தாமல் தத்ரூபமாக இருக்க நிஜமாகவே ஒரு சில சீன்களை எடுப்பது மிஷ்கினின் வழக்கம்.

அதனால்தான் இவரது திரைப்படங்கள் பார்க்கும் பொழுது நம்பகத்தன்மை உடைய படமாக இருந்து வந்துள்ளன. இந்த காரணத்தினால் இவரது திரைப்படத்திற்கான வரவேற்ப்பு மக்கள் மற்றும்  ரசிகர்கள் அதிகரித்து உள்ளது. மேலும் மிகப்பெரிய ஒரு ரசிகர் கூட்டமே இவரது படத்திற்கு இருகின்றனர். அந்த அளவிற்கு தனது படங்களின் மூலம் அனைவரையும் கவர்ந்துள்ளார்.

இதுவரை அவர் சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, யுத்தம் செய், முகமூடி, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், துப்பறிவாளன், பிசாசு, சைக்கோ ஆகிய அனைத்து திரைப்படங்களும் ஒவ்வொன்றும் வித்தியாசமாக இருக்கும் தற்போது  கூட பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தை ஆண்ட்ரியாவை வைத்து எடுத்து வருகிறார். திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு வித்தியாசமான பேய் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ஆண்ட்ரியா இந்த படத்திற்காக படுபயங்கரமாக உழைத்து உள்ளாராம் மேலும் படத்தின் கதைக்காக இவர் 15 நிமிடம் நிர்வாணமாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பிசாசு 2 படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது. மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது பின்னணியை பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறதாம்.

இதை முடித்த கையோடு மிஷ்கின் அடுத்த படத்தை இயக்க ரெடியாக இருக்கிறாராம். அவர் இயக்கும் புதிய படத்தில் ஹீரோவாக எஸ் ஜே சூர்யா நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் அந்தப் படத்தில் நடிகர் விதார்த் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. அதற்கான அறிவிப்பு வெகுவிரைவிலேயே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.