அட நம்ம தேவிஸ்ரீ பிரசாத்தா நடிகையிடம் இப்படி நடந்துகொண்டது.? அதுவும் ரகசிய திருமணமா.? ரசிகர்கள் ஷாக்..

devi-sri-prasad
devi-sri-prasad

சினிமாவில் தற்போது பல இசையமைப்பாளர்கள் இருந்து வருகின்றனர் ஆனால் தனக்கென ஒரு பாணியில் பல திரைப்படங்களுக்கு இசையமைத்து கொடுத்து வெற்றி கண்டு உள்ளார் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத். மேலும் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராகவும் திகழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தேவி ஸ்ரீ பிரசாத் தற்போது தெலுங்கு நடிகை ஒருவரை ரகசிய திருமணம் செய்து கொண்டதாக இணையத்தில் தகவல் வெளியாகி காட்டுதீ போல் பத்தி எரிகிறது.

தேவி ஸ்ரீ பிரசாத் எஸ்.பி பாலசுப்ரமணியத்தின் மகன் எஸ் பி சரவணன்  இணைந்து டான்ஸ் பார்ட்டி என்ற ஆல்பத்திற்கு முதன் முதலாக இசையமைத்து பிரபலமான இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத். அதன் பின்னர் தெலுங்கு திரைப்படத்தில் தேவி படத்திற்கு இசையமைக்க வாய்ப்பு கிடைத்தது.

அதன் பின்னர்  தேவி திரைப்படத்திற்கு இசையமைத்து இசையமைப்பாளராக சினிமாவில் தனது கால் தடத்தை பதித்தார் தேவி ஸ்ரீ பிரசாத். இவர் தெலுங்கில் மட்டும் அல்லாமல் தமிழ் சினிமாவிலும் முன்னணி இசையமைப்பாளராக இருந்து வருகிறார் அந்த வகையில் இவர் இசையமைத்த மழை, மாஸ், மாயாவி, சச்சின், ஆறு, சந்தோஷ் சுப்ரமணியம், வில்லு, சிங்கம், போன்ற வெற்றி திரைப்படங்களுக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் தேவி ஸ்ரீ பிரசாத் அவர்கள் பலமுறை பிலிம் பேர் விருது பெற்றுள்ளார் மேலும் தெலுங்கு திரைப்படங்களில் இசையமைத்து  ஏராளமான விருதுகளை பெற்று குவித்துள்ளார். இந்த நிலையில் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இருக்கு 42 வயதான நிலையில் திருமணம் செய்து கொள்ளாமல் முரட்டு சிங்கிளாகவே இருந்து வந்துள்ளார்.

இதனால் பல நடிகைகளுடன் கிசுகிசுவில் சிக்கினார் தேவி ஸ்ரீ பிரசாத். ஆனால் இந்த தகவல் ஒரு சில நாட்களிலேயே மறைந்து விடுகிறது. ஆனால் தற்போது வந்த ஒரு தகவல் மிகப்பெரிய அளவில் மறையாமல் வெடித்துள்ளது. ஆம் ரங்கஸ்தலம் படத்தில் நடித்த பூஜிதா என்ற நடிகையை ரகசிய திருமணம் செய்து கொண்டதாக தெலுங்கு ஊடகங்களில் செய்திகள் பரவி வருகின்றது இது குறித்து விளக்கம் அளித்த அந்த நடிகை நானும் தேவி ஸ்ரீ பிரசாதம் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக பரவிய தகவல் உண்மை தகவல் கிடையாது என்று கூறியுள்ளார்.

மேலும் தேவி ஸ்ரீ பிரசாத்தும் நானும் நல்ல நண்பர்கள் அது மட்டுமல்லாமல் இதுவரைக்கும் நானும் அவரும் டேட்டிங் கூட சென்றது கிடையாது உங்களுக்கு ஹாட் நியூஸ் தேவைக்காக இதுபோன்ற செய்திகளை பரப்புகிறீர்கள். இதுபோன்ற செய்திகளை வெளியிடும்போது தயவுசெய்து  அதனை ஆராய்ந்து செய்தியாக்குங்கள் என்று கூறி உள்ளார்.