வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர்கள் சூரி, விஜய் சேதுபதி, சேத்தன், பாவனி ஸ்ரீ உள்ளிட்ட பலரின் கூட்டணியில் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி தற்பொழுது வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் தான் விடுதலை இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாகி இருக்கும் நிலையில் முதல் பாகம் சமீபத்தில் வெளியானது இந்த படத்தில் சூரி ஹீரோவாக அறிமுகமாகி இருக்கும் நிலையில் இவரை தொடர்ந்து விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மேலும் இவர்களை தொடர்ந்து நடிகர் சேத்தனின் நடிப்பு மிகுந்த பாராட்டுகளை பெற்று வருகிறது. இவருடைய தத்ரூபமான நடிப்பை பார்த்து அனைவரும் மிரண்டு உள்ளனர் இருந்தாலும் இவர் ஒரு நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதால் மக்கள் இவரை திட்டி தீர்த்து வருகிறார்கள். மேலும் இவ்வளவு கொடூரமான இந்த கேரக்டர் மிகவும் அதிகமான திட்டுகளை வாங்கி வருவதோடு மட்டுமல்லாமல் பலரும் கையில் கிடைத்தால் அடித்து நொறுக்கும் அளவிற்கு கோபத்தில் இருந்து வருகிறார்கள்.
இவ்வாறு நடிகர் சேத்தனிடம் வெற்றி மாறன் அழகாக வேலைகளை வாங்கி சிறப்பான கருத்துக்களை வெளிப்படுத்தி உள்ளார். இந்நிலையில் சமீபத்தில் சேத்தன் தன்னுடைய மனைவியுடன் பேட்டி ஒன்றில் கலந்துக் கொண்ட நிலையில் அவருடைய மனைவி தேவதர்ஷினி இந்த படத்தை பார்த்த பொழுது இவர் தான் இந்த கேரக்டரில் நடித்துள்ளாரா என்று அவ்வப்போது திரும்பி திரும்பி பார்த்ததாக தெரிவித்துள்ளார்.
மேலும் படத்தை பார்த்துவிட்டு நானும் என்னுடைய மகளும் சேர்ந்துக் கொண்டு ஏன் இப்படி செய்தீர்கள் என்று சேத்தனை அடித்ததாகவும் கூறிய இவர் மேலும் இந்த படத்தை பார்த்துவிட்டு பலரும் சேத்தனை திருட்டுவதாகவும் இதுதான் அந்த கேரக்டர் கிடைத்த வரவேற்பாக நான் பார்ப்பதாகவும் கூறியுள்ளார்.
இதனை அடுத்து அந்த மீசை, தோரணையை பார்த்துவிட்டு சேத்தன் ஹிட்லர் போலவே இருப்பதாக தேவதர்ஷினி கமெண்ட் செய்துள்ளார். நடிகை தேவதர்ஷினி பல திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்த பிரபலமானவர் அந்த வகையில் கொடூரமான வில்லனாக சேத்தன் மாறுபட்டு நடித்துள்ளதையும் சுட்டிக்காட்டி உள்ளார். இவ்வாறு இவர் அளித்துள்ள பேட்டி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.