சினிமா உலகில் ஒரு ஹீரோ எப்படி இருக்கிறாரோ அதே போல நிஜ வாழ்க்கையில் இருக்கிறார் என்றால் இல்லை என்பதுதான் உண்மை. ஆனால் ஒரு சிலரோ சினிமாவிலும் சரி நிஜ வாழ்க்கையிலும் சரி ஒரே மாதிரியான பண்புகளை வைத்து வருகின்றனர் அதற்கு எடுத்துக்காட்டாக நாம் அஜித்தை சொல்லலாம்.
அவர் எப்போதுமே ஒரே மாதிரியாக இருப்பதால் என்னவோ அஜித் படங்கள் தோல்வியை தழுவினாலும் கூட அவரது ரசிகர்கள் அவரை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகின்றனர் இவரைப்போலவே எல்லோரும் இருப்பதில்லை. இப்படி இருக்கின்ற நிலையில் மணிவண்ணன் சினிமாவிலும் சரி நிஜ வாழ்க்கையிலும் ஒரே மாதிரியாகத்தான் இருந்துள்ளார்.
என ஒரு தகவல் வெளிவந்துள்ளது இயக்குனரும் நடிகருமான தேவயானியின் கணவர் ராஜகுமாரன் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியது. இயக்குனரும் நடிகரும் எனப் பன்முகத் தன்மைகளை கொண்டிருக்கும் மணிவண்ணனை நான் முதன்முதலில் சூரியவம்சம் திரைப்படத்தின் பொழுது பார்த்தேன் அவர் ஒரு திறமைசாலி. அவர் இயக்குனராக பணியாற்றிய..
போது படத்தின் கதையை எழுதுவதே கிடையாது ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்து கதையை உருவாக்குவார். ஒரே சமயத்தில் இரண்டு மூன்று படங்களை இயக்கும் அளவிற்கு அவரிடம் பல திறமைகள் இருந்ததாகவும் கூறினார். இது ஒரு பக்கம் இருந்தாலும் மறுபக்கம் மணிவண்ணன் சூட்டிங் ஸ்பாட்டில் சரி ஷுட்டிங் இல்லாத சமயத்திலும் சரி அவர் எப்பொழுதுமே குடித்து கொண்டு தான் இருப்பார் அது அவரது பழக்கமாகவே மாறியது.
அது என்ன கலாச்சாரமோ தெரியவில்லையே மணிவண்ணனுக்கு அது ரொம்ப பழக்கப்பட்ட ஒன்றாக இருந்தது அது இல்லை என்றால் மணிவண்ணன் சார் இப்பொழுது நம்முடன் இருந்திருப்பார் என கூறினார்.