தற்போது விவசாயத்தின் மீது இருக்கும் நம்பிக்கை மக்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது இந்நிலையில் பல்வேறு பிரபலங்களும் தொழிலதிபர்களும் விவசாயத்தில் ஆர்வம் காட்டி மக்களையும் ஆர்வமூட்டி வருகிறார்கள்.
ஒரு பக்கம் விவசாயத்தின் மீது நம்பிக்கை இழந்து மக்கள் நிலத்தை பிளாட் போட்டு வித்தாலும் மறுபக்கம் அவர்களுக்கு ஊக்கமூட்டும் வகையில் பிரபலங்கள் பலரும் மரக்கன்றுகளை நடுவது வீட்டிலேயே சில பயிர்களை விதைப்பது போன்ற பல்வேறு செயல்களை செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் தமிழ் சினிமாவின் மிகப் பிரபலமான நடிகையாகவும் முன்னணி நடிகையாகவும் வலம் வந்த நடிகை தேவயானி செய்த செயலால் பல்வேறு தரப்பினரும் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். அந்தவகையில் இவர் ஈரோடு அருகே பிளாட் போட்டு விற்க நிலங்களை வாங்கி அவற்றில் விவசாயம் செய்து உள்ளார்.
இவ்வாறு பிரபலமான நமது நடிகை இயக்குனர் ராஜகுமாரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் அவருடைய சொந்த மாவட்டம் ஈரோடு, அத்தியூர், கிராமத்தைச் சேர்ந்தவர். இந்நிலையில் தனது மனைவி மகள்களை அடிக்கடி தனது சொந்த ஊருக்கு அழைத்துச் செல்வது வழக்கம்.
அந்தவகையில் தற்போது இவர்கள் விவசாயத்தில் ஈடுபட்டு அவர்களுடைய தோட்டத்தில் செண்டுமல்லி பூக்கள் பூத்து குலுங்குகிறது. இவ்வாறு அந்த அழகை பார்த்த தேவயானி அதனை புகைப்படமாக எடுத்து சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இவ்வாறு தற்போது விவசாய நிலங்கள் நாடாக மாறி வரும் இந்த நிலையில் பிளாட்டை வாங்கி விவசாயம் செய்து மாபெரும் மாற்றத்தை ஒன்று செய்துள்ளார் இதனால் தேவயானியின் செயலைப் பார்த்து பல்வேறு தரப்பினரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.