உலக நாயகன் கமலஹாசன் தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு நடிகராக இருந்து வருகிறார் இவர் இதுவரை 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் இருப்பினும் கடந்த மூன்று ஆண்டுகளாக சினிமா பக்கமே தலை காட்டாமல் இருந்த இவர் லோகேஷ் கனகராஜ் சொன்ன விக்ரம் படத்தின் கதை பிடித்துப் போகவே..
அந்த படத்தில் நடித்ததோடு மட்டுமல்லாமல் அந்த படத்தையும் மிகப் பிரம்மாண்ட பொருள் செலவில் தயாரித்தார். படம் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்று இந்தியா முழுவதும் மிகப்பெரிய வசூலை அள்ளிக் குவித்தது. விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்பொழுது கமலுக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் குவிந்து இருக்கின்றன.
தற்பொழுது இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார் அதனைத் தொடர்ந்து ஹச். வினோத்துடன் ஒரு படம் மணிரத்தினத்துடன் ஒரு படம், லோகேஷ் உடன் மற்றொரு படம் பண்ண இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கின்ற நிலையில் கமல் ஏற்கனவே பல்வேறு படங்களில் கமிட் ஆகி பென்டிங் இருக்கிறது.
அந்த வகையில் 1992 ஆம் ஆண்டு வெளியான தேவர் மகன் படத்தில் தொடர்ச்சியாக கதை அமைந்திருக்கும் என கூறப்பட்டது ஆனால் தேவர்மகன் 2 தொடங்கப்படாமல் டிராப்பானது என சில தகவல்கள் வெளிவந்த நிலையில் தற்பொழுது மகேஷ் நாராயணன் சமீபத்திய பேட்டி ஒன்றில் சில தகவல்களை வெளிப்படையாக கூறியுள்ளார்.
அதில் அவர் சொன்னது தேவர்மகன் 2 படம் டிராப்பாகவில்லை இது கமல் சார் எழுதிய ஸ்கிரிப்ட் தற்பொழுது அவர் பிசியாக மற்ற படங்களில் நடித்து வருகிறார் அதை முடித்த பிறகு எங்கள் கூட்டணி தொடரும்.. நான் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனத்தில் நீண்ட காலமாக அங்கமாக இருந்து உள்ளேன் என கூறினார். இதில் இருந்தே தெரிகிறது தேவர்மகன் 2 உருவாகுவது கன்ஃபார்ம் தான்..