தேவதர்ஷினி நடிப்பில் மட்டும் கில்லி அல்ல இந்தத் துறையிலும் கில்லி தான்.! பலருக்கும் தெரியாத சுவாரஸ்யமான தகவல்

dheva-tharshini
dheva-tharshini

வெள்ளித்திரை, சின்னத்திரை என இரண்டிலும் கலக்கி வருபவர் நடிகை தேவதர்ஷினி. இவர் அறிமுகமான முதல் படத்திலேயே இவரின் நடிப்பு திறமை ஆனால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்ததோடு மட்டுமல்லாமல் தமிழ்நாடு பெஸ்ட் காமெடி என்ற அரசின் விருதையும் பெற்றார். இவர் காமெடி நடிகையாக மட்டுமல்லாமல் பன்முகத்திறமைகளையும் கொண்டவர் ஆவார்.

அந்தவகையில் சின்னத்திரையிலும் இவர் சின்ன பாப்பா பெரிய பாப்பா மற்றும் சிதம்பர ரகசியம் போன்ற இன்னும் பல சீரியல்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி சின்னத்திரையிலும் கலக்கி வந்தார். பிறகு வெள்ளித்திரையிலும் பல முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து தனது சிறந்த காமெடி திறமையை வெளிப்படுத்தினார்.

அந்த வகையில் தற்பொழுது உள்ள முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். சின்னத்திரையில் பணியாற்றியதால் இன்றளவும் பல நிகழ்ச்சிகளில் நடுவராக பணியாற்றி வருகிறார். அந்த வகையில் காமெடி கலாட்டா, மிஸ்டர் அண்ட் மிஸஸ் உப்பட இன்னும் சில நிகழ்சிகளில் நடுவராக பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில் வெள்ளித்திரையிலும் இவர் சளைத்தவர் அல்ல இவர் நடித்த அனைத்து படங்களுமே தனது காமெடி திறமையை வெளிப்படுத்தி இருப்பார்.  அதிலும் முக்கியமாக காஞ்சனா 1 மிகவும் அற்புதமாக நடித்து ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

இந்நிலையில் தேவதர்ஷினி என்றாலே அவர் காமெடி நடிகை என்பது மட்டும்தான் நாம் அறிந்து இருப்போம்.ஆனால் அவருக்கு இன்னொரு புறம் சினிமாத்துறை மட்டுமல்லாமல் இவர் ஒரு சிறந்த மனநல மருத்துவர் ஆவார் என்பது பலர் அறியாத ஒன்று.

அந்த வகையில் சினிமாவில் முன்னணி நடிகர்,நடிகைகளாக வலம் வந்து கொண்டிருக்கும் பலர் இவரிடம் சென்று போதைப்பழக்கத்திலிருந்து எப்படி வெளிவர வேண்டும் என்பதற்கு சில டிப்ஸ்களை கேப்பார்கலாம் இதனை தேவதர்ஷினியே ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.