இளையராஜாவின் ஆசை மகள் யுவன் சங்கர் ராஜாவின் சகோதரி கார்த்திக் ராஜா சகோதரியான பவதாரணி திடீரென உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார் அதாவது இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சைக்காக சென்றிருந்த பவா தரணி நேற்று மாலை ஐந்து முப்பது மணிக்கு சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார்.
பவதாரணி இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இசையில் பல பாடல்களை பாடியுள்ளார் அதுமட்டுமில்லாமல் பிற இசையமைப்பாளர்கள் ஆன சிற்பி, தேவா, ஹரிஷ் ஜெயராஜ் ஜிவி பிரகாஷ் குமார் ஆகியோர் இசையிலும் பாடலை பாடியுள்ளார் பவதாரணி தற்பொழுது 47 வயது இவருக்கு கல்லீரல் புற்றுநோய் ஏற்பட்டது அதனால் சிகிச்சை பலனில்லாமல் மரணம் அடைந்தார் இவரின் மரணம் தமிழ் சினிமா உலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
அடக்கடவுளே இப்படியே ஆகணும் பவதாரணிக்காக இரங்கல் தெரிவித்த சினிமா பிரபலங்கள்..
தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம் மொழிகளிலும் பாடல் பாடியுள்ளார் அது மட்டும் இல்லாமல் தெலுங்கு மற்றும் கன்னட சினிமாக்களுக்கு இசையமைத்துள்ளார் பொதுவாக தன்னுடைய அப்பா இளையராஜா சகோதரர் யுவன் சங்கர் ராஜா கார்த்திக் ராஜா ஆகிய இசையமைப்பில் தான் பல பாடலை பாடியுள்ளார். இவர்களை தாண்டி பிற இசையமைப்பாளர் இசையிலும் பாடலை பாடியுள்ளார்.
அந்த வகையில் சிற்பி தேவா ஹாரிஸ் ஜெயராஜ் ஜிவி பிரகாஷ் குமார் இசையிலும் பாடியுள்ளார்.
அந்த வகையில் பிரபு, கவுண்டமணி, மந்திரா ஆகிய நடிப்பில் 1997 ஆம் ஆண்டு வெளியான தேடினேன் வந்தது என்ற காமெடி திரைப்படத்தில் பாடகர் ஹரிஹரனுடன் இணைந்து ஆல்ப்ஸ் மழை காற்று என்று டூயட் பாடலை பாடியிருந்தார்.
விஜய் சூர்யா முதல் முறையாக இணைந்து நடித்த நேருக்கு நேர் என்ற திரைப்படத்தில் தேவா இசை அமைத்த துடிக்கின்ற காதல் தும்மலை போன்றது என்ற பாடலை பாடகர் மனோவுடன் இணைந்து பாடி இருப்பார்.
அதர்வா, பிரியா ஆனந்த் ஆகிய நடிப்பில் ஜீவி பிரகாஷ் இசையில் வெளியான இரும்பு குதிரை திரைப்படத்தில் பெண்ணே பெண்ணே என்ற மெலடி பாடல் பாடியிருந்தார்.
அதேபோல் கார்த்திக் இசையமைப்பாளராக அறிமுகமான திரைப்படம் அரவான் இந்த திரைப்படத்தில் வசந்தபாலன் இயக்கியிருந்தார் இந்த திரைப்படத்தில் உன்னை கொல்ல போறேன் என்ற மெலடி பாடலையும் கார்த்திகேயன் என்ற பாடல் ஆசிரியருடன் இணைந்து பாடி இருப்பார் நா முத்துக்குமார் தான் இந்த பாடல் வரிகளை எழுதி இருந்தார்.