மணிரத்தினம் இயக்கத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்ற திரைப்படம் தான் பொன்னியின் செல்வன். திரையரங்குகளில் வெளியான இந்த படம் ஓடிடியிலும் வெளியாகி நல்ல வசூலை ஈட்டியது அந்த வகையில் இரண்டு பாகங்களாக வெளியான நிலையில் பலருடைய எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்தது.
இவ்வாறு பொன்னியின் செல்வன் படத்தில் இரண்டாவது பாகம் PS2 என்ற தலைப்பில் வெளியான நிலையில் அதேபோல் தற்பொழுது P2 என்ற டைட்டிலில் வேறு ஒரு புதிய படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகளில் நடித்து வந்த நடிகர் மனோஜ் என்பவர் முதன்முறையாக தமிழுக்கு அறிமுகமாக இருக்கிறார்.
மேலும் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான யாத்திசை பாடத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த சித்து குமரேசன் ஹீரோயினாக நடிக்க உள்ளார். இதனை அடுத்து இந்த படத்தில் இளவரசு, ராஜ சிம்மன், சம்பத் ராம், தீபா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கும் நிலையில் தேனிசைத் தென்றல் தேவா இசை அமைக்கிறார்.
இந்த படத்தை சிவம் என்பவர் இயக்க இருக்கும் நிலையில் தற்போது இந்த படம் கூறிய பொழுது திரில்லர் கதை அம்சம் கொண்ட இந்த படம் நம்பிக்கை துரோகத்தை மையப்படுத்தி உருவாக்கியுள்ளது என்றும் சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு வரலாற்று படமாக அமைந்த பொன்னியின் செல்வன் படத்தின் டைட்டிலை P2 என வைத்து இந்த படம் உருவாக இருக்கும் நிலையில் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. தற்போது இந்த படத்தின் ஆரம்பக்கட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் பட குழு ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வெளியாகிய அதிகாரப்பூர்வமான தகவலை வெளியிட்டுள்ளார்கள்.