விக்னேஷ் சிவன் அழைப்பு விடுத்தும் படத்தில் நடிக்க மறுத்து பிரபல நடிகர்,நடிகை.!

viknesh-shivani
viknesh-shivani

பல தடைகளை தாண்டி தற்பொழுது தமிழ் சினிமாவில் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களை இயக்கி வருபவர் தான் இயக்குனர் விக்னேஷ் சிவன்.இவர் இயக்கத்தில் கடைசியாக காத்து வாக்குல 2 காதல் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது தற்பொழுது அஜித்தின் 62ஆவது திரைப்படத்தினை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளார்.

இந்நிலையில் விக்னேஷ் சிவன் தனது திரைப்படத்தின் நடிப்பதற்காக ஒரு ஹீரோவுக்கு வாய்ப்பு கொடுத்தும் அவர் வேண்டாம் என மறுத்துள்ளார் இதனை பற்றி தகவல் தற்பொழுது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விக்னேஷ் சிவன் சிம்பு நடிப்பில் வெளிவந்த போடா போடி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை பெறவில்லை.

அதன் பிறகு விக்னேஷ் சிவன் நானும் ரவுடி திரைப்படத்தின் கதையை பல ஹீரோக்களிடம் கூறிவுள்ளார். பலரும் அந்த கதை வேண்டாம் என மறுத்த நிலையில் அப்பொழுது அவரின் நெருங்கிய நண்பராக அனிருத் மற்றும் சமந்தாவை முதலில் தேர்வு செய்துள்ளார். எனவே அனிருத்தை இந்த படத்தில் நடிக்க வைத்து விடலாம் என முடிவில் இருந்துள்ளார்.

அந்த நேரத்தில் அனிருத் பல படங்களில் பிசியாக பணியாற்றி வந்ததால் சிறிது காலம் காத்து வந்தார். அதுமட்டுமல்லாமல் அனிருத் இசையில் ஆர்வமாக இருந்ததால் பெரிதாக நடிப்பதில் விருப்பம் இல்லாமல் இருந்து வந்துள்ளார். இதேபோல் அதன் பிறகு பல நடிகர்களை சந்தித்து கதை கூறியவர் இறுதியாக விஜய் சேதுபதியை சந்தித்து கதையை கூறிவுள்ளார்.

அப்பொழுது தனது நட்பிற்காக விஜய் சேதுபதியும் நானும் ரவுடிதான் திரைப்படத்தில் நடிக்க சம்பாதித்தார். இவ்வாறு ஹீரோ கிடைத்த நிலையில் இந்த திரைப்படம் படப்பிடிப்பு நடக்க லேட் ஆனதால் சமந்தா நடிக்க மறந்துவிட்டார். அதன் பிறகு நயன்தாராவிடம் இந்த படத்தை பற்றி கூறி நயன்தாரா ஓகே சொல்லிவுள்ளார்.இவ்வாறு தற்பொழுது நட்சத்திர ஜோடிகளாக வாழும் கொண்டிருக்கும் நயன்தாரா விக்னேஷ் சிவன் காதலுக்கு நானும் ரவுடி தான் திரைப்படம் முக்கியமான ஒரு பங்கு உள்ளது.