திரைப்படங்களில் கவர்ச்சியில் கதகளி ஆடி இருந்தாலும்..! நிஜத்தில் நாங்கள் இப்படித்தான் என பிரபல நடிகைகள்..!

disko-santhi
disko-santhi

தற்போது தமிழ் சினிமாவில் உள்ள பல்வேறு நடிகைகளும் திரைப்படங்களில் கவர்ச்சி காட்ட வேண்டுமென்றால் அதற்கு தகுந்தாற்போல் தாங்களே தங்களுடைய திரைப்படத்தில் கவர்ச்சி காட்டி வருகிறார்கள் ஆனால் இதற்கு முன்பாக தமிழ் சினிமாவில் அதற்கென சில நடிகைகள் வலம் வந்து கொண்டிருந்தார்கள்.

இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் அந்த காலகட்டத்தில் நடித்த நடிகைகள் பலரும் கவர்ச்சியான உடை அணிவதை விரும்புவது கிடையாது அந்த வகையில் கவர்ச்சி காட்டுவதர்க்கு ஜெயமாலினி, சில்க் ஸ்மிதா, ஜோதிலட்சுமி, டிஸ்கோ சாந்தி, குயிலி, அனுராதா போன்ற பிரபலங்கள் தான் நடித்து வந்தார்கள்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகைகள் பல்வேறு முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடனமாடியது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் இவர்களுக்கு ஏராளமான ரசிகர்கள் கூட்டம் திரண்டது மட்டுமில்லாமல் சினிமாவில் முன்னிலை வகிக்க காரணமாக இருந்தது.

ஆனால் இவர்கள் திரையில் கவர்ச்சி காட்டி நடனமாடி இருந்தாலும் இவருடைய சொந்த வாழ்க்கையில் இவர்கள் மிகவும் கண்ணியமாகவும் இருந்து வந்தார்கள்.  இதில் சில்க் ஸ்மிதா டிஸ்கோ சாந்தி போன்ற நடிகைகள் மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில்க் ஸ்மிதா கூட திருமணம் செய்துகொண்டு மிக அழகாக வாழ வேண்டும் என பல்வேறு கனவுகளுடன் இருந்து வந்தார் ஆனால் அவருடைய துரதிஸ்டவசமாக அவர் பிரபலமாக இருக்கும் பொழுது அறிய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விட்டது.

அதேபோல நடிகை டிஸ்கோ சாந்தி ஸ்ரீஹரி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவரும் ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பாக உடல்நலக்குறைவின் காரணமாக இந்த உலகை விட்டுப் போனார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு பிரபலமான டிஸ்கோ சாந்தி நடிகர் பிரகாஷ்ராஜின் முன்னாள் மனைவியின் அக்கா என்பது குறிப்பிடத்தக்கது.