நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வரும் வருகிறார் இவர் அண்மைக்காலமாக நடிக்கும் படங்கள் ஒவ்வொன்றும் நூறு கோடிக்கு மேல் வசூல் செய்கின்றன இப்பொழுது தீபாவளியை முன்னிட்டு சிவகார்த்திகேயன் நடித்த பிரின்ஸ் திரைப்படம்.
கலவையான விமர்சனத்தை பெற்று வசூல் ரீதியாக அடித்து நொறுக்கி ஓடிக்கொண்டிருக்கிறது. இதுவரை மட்டுமே 42 கோடி வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் கையில் மாவீரன் மற்றும் பல படங்கள் கைவசம் இருக்கின்றன. இந்த நிலையில் சிவகார்த்திகேயன் பற்றிய செய்தி ஒன்று இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது.
சினிமா உலகில் ஓடிக்கொண்டிருந்தாலும் ஆரம்ப காலகட்டத்தில் இவர் விஜய் டிவி தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு, ஜோடி நம்பர் ஒன் போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார் ஒரு கட்டத்தில் மெரினா படத்தின் மூலம் சிவகார்த்திகேயன் ஹீரோவாக அடி எடுத்து வைத்தார் அதன் பிறகு ஹீரோ, குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
அப்படி ஒரு தடவை தனுஷ் உடன் கைகோர்த்து 3 அவருக்கு நண்பனாக நடித்தார்.. பிறகு படிப்படியாக தனது சினிமா பயணத்தை வளர்த்துக் கொண்டார்.. நடிக்க வருவதற்கு முன்பாக சிவகார்த்திகேயன் சின்னத்திரையில் பணியாற்றிக் கொண்டிருந்தார். ஒரு தடவை மனோபாலா தொலைக்காட்சியில் சிவகார்த்திகேயனின் திறமையை பார்த்து அசந்து போனார்.
பின்பு சிவகார்த்திகேயனை தனது அலுவலகத்திற்கு அழைத்தாராம் அதன்படி அவரது அலுவலகத்திற்கு வந்த சிவ கார்த்திகேயன் மனோபாலாவிடம் பல விஷயங்கள் மனம் விட்டு பேசுகிறார் அதாவது சிவகார்த்திகேயன் சினிமாவில் ஹீரோவுக்கு நண்பனாக நடிக்க வேண்டும் என்பதுதான் ஆசை.. ஒரு படத்தில் ஹீரோவுக்கு நண்பன் என்ற கதாபாத்திரம் இருந்தால் என் ஞாபகம்தான் வரணும் எனக் கூறினார்.
அதற்கு மனோபாலா உன்னை நீயே குறுக்கிக் கொள்கிறாய் என கேட்டாராம் அதற்கு சிவகார்த்திகேயன் என்னுடைய தகுதிக்கு அது போதும் சார் நம்ம தகுதிக்கு அந்த மாதிரி ரோல் தான் சார் தாருவாக என தன்னைத்தானே தாழ்த்திக் கொண்டு பேசினார் ஆனால் பின் நாட்களில் எல்லாம் மாறிப்போனது அவர் ஹீரோவாக தொடர்ந்து நல்ல நல்ல படங்களை கொடுத்து தற்பொழுது உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கிறார்..