இரண்டு குழந்தை பிறந்தாலும் தனது பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடிய சினேகா.! வைரலாகும் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்

sneha
sneha

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை சினேகா. இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார் மேலும் நடிகை சினேகா கமல், விஜய், சூர்யா, பிரசாந்த், தனுஷ், உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன்  ஜோடி போட்டு நடித்துள்ளார்.

மேலும் நடிகை சினேகாவை ரசிகர்கள் புன்னகை அரசி என அழைக்கப்பட்டு வருகிறார்கள். இவர் 2000 ஆண்டு வெளியான என்னவளே என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு பல திரைப்படங்களில் நடித்து தனக்கான ஒரு மிகப்பெரிய இடத்தை பிடித்தார் என்று தான் சொல்ல வேண்டும் அது மட்டும் அல்லாமல் இவருக்கு இன்றுவரைக்கும் ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறது.

மேலும் நடிகை சினேகா சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் போதே நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு எந்த ஒரு திரைப்படத்திலும் நடிக்காமல் இருந்து வந்த நடிகை சினேகா அதன் பிறகு ஒரு சில திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பதும் நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று ஏனென்றால் இவர் அடிக்கடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவது வழக்கமாக வைத்துள்ளார் அந்த வகையில் தனது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டு வருகிறார்.

மேலும் நடிகை சினேகாவிற்கு இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார் அது மட்டுமல்லாமல் இவர்களை பல பிரபலங்கள் வாழ்த்தி வருகின்றனர். மேலும் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக தனது கணவருடன் இயற்கை நிறைந்த இடத்திற்கு சென்று கொண்டாடி வருகிறார். அது மட்டுமல்லாமல் இந்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போதைய இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

sneha
sneha
sneha
sneha