தமிழ் திரையுலகில் தல அஜித்தின் பல்வேறு திரைப்படங்களை தயாரித்த தயாரிப்பு நிறுவனம்தான் எஸ்எஸ் சக்கரவர்த்தியின் நிக் ஆர்ட்ஸ் தயாரிப்பு நிறுவனம் ஆகும். இவர்கள் தயாரித்த திரைப்படங்களின் லிஸ்ட்டை எடுத்துப் பார்த்தால் அதில் தல அஜித்தின் திரைப்படங்கள் தான் அதிகம் இருக்கும்.
அந்த வகையில் சக்கரவர்த்தி தல அஜித்தை வைத்து முதன்முதலாக ராசி என்ற திரைப்படத்தை தயாரித்து இருந்தார் இவ்வாறு உருவான இந்த திரைப்படத்தில் தல அஜித் மற்றும் ரம்பா நடித்திருப்பார். அதேபோல தல அஜித்தின் வாலி திரைப்படத்தையும் கூட இந்த நிறுவனம்தான் தயாரித்திருந்தது.
மேலும் இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தல அஜித் மற்றும் ஜோதிகா இருவரும் இணைந்து நடித்த முகவரி என்ற திரைப்படத்தை கூட சக்கரவர்த்தி தான் தயாரித்திருந்தார். மேலும் சிட்டிசன், ரெட், வில்லன் போன்ற பல்வேறு திரைப்படங்களும் சக்கரவர்த்திக்கு நல்ல வெற்றியை தந்தது.
இதனை தொடர்ந்து கடந்த 2005ஆம் ஆண்டு லிங்குசாமி இயக்கத்தில் அஜித் மற்றும் திரிஷா நடித்து வெளியாகிய திரைப்படம் தான் ஆஞ்சநேயா அதன் பின்னர் ஜி ஆகிய இரண்டு திரைப்படங்களும் மாபெரும் தோல்வியை சந்தித்தது மட்டுமல்லாமல் தோல்வியின் கணக்கு வழக்குகளை சரியாக தல அஜித்திடம் காட்டாமல் இவர் ஏமாற்றிவிட்டார்.
ஆனால் அதன் பின்னர் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் அஜித் மற்றும் அசின் கனிகா ஆகியோர் இணைந்து நடித்த திரைப்படம் தான் வரலாறு இந்த திரைப்படத்தையும் சக்கரவர்த்தி தான் தயாரித்து இருந்தார் ஆனால் தல அஜித்தை ஏமாற்றியது அஜித்திற்கு தெரிந்தும் கூட இந்த திரைப்படத்தை மிகச் சிறப்பாக நடித்துக் கொடுத்தார்.
அந்த வகையில் இந்த திரைப்படமானது ஒரு கோடி செலவில் எடுக்கப்பட்டு மாபெரும் வசூல் செய்து சாதனை படைத்தது. ஆனால் அதன் பின்னர் எஸ்எஸ் சக்கரவர்த்தியின் தயாரிப்பில் தல அஜித் ஒரு திரைப்படத்தில் கூட நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.