கடந்த சில வருடங்களாக ஹீரோக்கள் பெரிதும் ஆக்சன் படங்களிலேயே நடிக்க விரும்புகின்றனர் அதுவும் அவர்களுக்கு ஒர்க் அவுட் ஆகிறது. இதனால் நடிகைகளுக்கு பெரிய கதாபாத்திரம் கிடைக்கவில்லை.. ஒரு சில படத்தில் நடிகைகளே கிடையாது.. கைததி படத்தில் ஹீரோயின் கிடையாது, பாடலும் கிடையாது.
மாஸ்டர் படத்திலேயும் பெரும் அளவு ஹீரோயின் காண கதாபாத்திரம் இருக்காது.. கமல் நடித்த விக்ரம் படத்தில் அதே போல் தான் இவர்களைப் போலவே கடந்த சில வருடங்களாக அஜித்தும் ஹீரோயினுக்கு அதிக இம்பார்டன்ட் இல்லாத கதைகளில் நடித்து வருகிறார். அதுவும் அவருக்கு வெற்றியை பெற்று தந்துள்ளன.
அந்த வகையில் அஜித்தின் நடிப்பில் ஹச். வினோத் இயக்கத்தில் உருவான துணிவு திரைப்படம்.. முழுக்க முழுக்க பேக்கில் நடிக்கும் குளறுபடிகளை மட்டுமே தெளிவாக காட்டி இருக்கும் அஜித்துடன் சேர்ந்து மஞ்சு வாரியார் நடித்திருப்பார் ஆனால் இந்த படத்தில் அவர் ஜோடியாக நடிக்காமல் நட்பு ரீதியான இருக்கும் இந்த படத்தில் ரொமான்ஸ், பாடலோ சேர்ந்து வராது.
அதேபோலவே தான் 2013 ஆம் ஆண்டு விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவான ஆரம்பம் இந்த படத்தில் ஆர்யா, டாப்ஸி, நயன்தாரா போன்ற பல பிரபலங்கள் நடித்திருப்பார் இந்த படத்தில் ஆர்யா, டாப்ஸிக்கு கூட பாடல்கள் சென்டிமென்ட் சீன்கள், ரொமான்ஸ் எல்லாம் இருக்கும் ஆனால் அஜித்துக்கும், நயன்தாராவுக்கும் பாடல்களோ எந்த ஒரு சீனுமே இருக்காது..
சொல்லப்போனால் இந்த படத்தில் நயன்தாரா அஜித்துக்கு உதவி மட்டுமே பண்ணுவார்.. 2022 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் ஹச். வினோத் இயக்கத்தில் உருவான வலிமை திரைப்படம். இதில் ஹீமோ குரேஷி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார். இதில் அஜித்துக்கும், ஹீமோ குரேஷிக்கும் இடையே நட்பு ரீதியாக தான் இருக்கும். ஆனால் இந்த மூன்று திரைப்படமே வெளிவந்து வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது.