தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் சமீபகாலமாக ஆக்சன் கலந்த திரைப்படங்களில் நடித்து வந்த இவர் தற்போது கிராமத்து சாயலில் உள்ள படங்களில் நடிக்க அதிகம் ஆர்வம் காட்டினார்.
அந்தவகையில் சிறுத்தை சிவாவுடன் ரஜினி இணைந்து கிராமத்து கதையில் குடும்பங்கள் கவரும் படியான செண்டிமெண்ட் சீன் கள் நிறைந்த ஆக்சன் திரைப்படமாக அண்ணாத்த உருவாகி உள்ளது. ரஜினியின் அண்ணாத்த திரைப்படம் தீபாவளிக்கு திரைக்கு வர உள்ளது என சமீபத்தில் கூறியது.
மேலும் இந்த படத்தில் இருந்து வெளியான மோஷன் போஸ்டர் நல்ல வரவேற்ப்பை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது. இப்படி இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு இருக்கின்ற நிலையில் ரஜினியின் அடுத்த படம் யாருடன் இணைவார். என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக இருந்தது.
இப்படி இருந்த நிலையில் இளம் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி என்று ரசிகர்கள் அடித்து கூறினர். அதன்படி தேசிங்கு பெரியசாமி தான் சூப்பர் ஸ்டார் ரஜினியின் அடுத்த படத்தில் இயக்க போகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்தை ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனம் மிகப்பெரிய பொருட்செலவில் எடுக்க இருக்கிறது.
மேலும் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளிவரும் என கூறப்பட்டுள்ளது. மேலும் இதற்கிடையே பேசிய இயக்குனர் தேசிங்கு பெரியசாமி : இப்படம் குறித்தும் பேசினார்ம் அடுத்த படத்தை நான் நான் இயக்குவேன் என்றும் தெரிய வில்லை ஆனால் ஸ்கிரிப்ட் வேலைகள் போய்க் கொண்டிருப்பதாகவும் அவர் கூறி உள்ளார்.