தமிழ் சினிமாவை கொண்டாடும் நடிகர் என்றால் அவர்களில் ஒருவர் அஜித்தும் உண்டு, அஜித்திற்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது அதுமட்டுமில்லாமல் சினிமா பிரபலங்களும் ரசிகர்கள் இருக்கிறார்கள். தல நடிப்பில் கடந்த வருடம் வெளியாகிய நேர்கொண்டபார்வை, விசுவாசம் ஆகிய இரண்டு திரைப்படங்களும் மெகா ஹிட்டானது.
இந்தநிலையில் அஜித் தற்பொழுது வலிமை திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார், இந்த கொரோனா காரணமாக படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் வலிமை திரைப்படத்தில் அஜீத் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என தகவல் கிடைத்தது. அதுமட்டுமில்லாமல் சில ஸ்டண்ட் காட்சிகளும இடம்பெறும் என தகவல் லீக்கானது.
இந்தநிலையில் அஜித் நடிப்பை தாண்டி போட்டோசூட் எடுப்பது, ஹெலிகேம் செய்வது, துப்பாக்கி சுடுவது, பைக் ரேஸ், கார் ரேஸ் என பல துறைகளில் தனது திறமையை நிரூபித்துள்ளார், சமீபத்தில் கட தக்ஷா குழுவுடன் இணைந்து பல ட்ரோன் வாகனத்தை செய்தார்.
இந்த நிலையில் ட்ரோன்களை பயன்படுத்தி அரசாங்கம் பல இடங்களில் சனிடைசர் தெளித்து வருகிறது, அஜித்தின் இந்த முயற்சி தக்க சமயத்தில் அரசாங்கத்திற்கு பயனுள்ளதாக இருப்பதால் பலரும் அஜித்தைப் பாராட்டி வருகிறார்கள்.
அதேபோல் கர்நாடக துணை முதல்வரும் அஜித்திற்கு நன்றி தெரிவித்துள்ளார், அதுமட்டுமலலாமல் பல பிரபலங்களும் அஜித்தை புகழ்ந்து தள்ளுகிறார்கள்.