பாகிஸ்தான் அணியில் தலைசிறந்த பந்து விச்சளராக வலம் வந்தவர் முகமது அமீர் இவர் 29 வயதிலேயே ஓய்வு அறிவித்தது. பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தாலும் அதற்கான காரணத்தை சொல்லி விடை பெற்றுள்ளார் அவரது மனைவி இங்கிலாந்தைச் சேர்ந்தவர் என்பதால் அவர் தற்போது இங்கிலாந்தில் குடியேறி உள்ளார்.
இவரை பாகிஸ்தான் அணிக்கு திரும்ப வேண்டும் என பல முன்னணி கிரிக்கெட் வீரர்கள் கூறியும் அதற்கு எந்த ஒரு பதிலையும் தெரிவிக்காமல் இருக்கிறார் அவர் தற்போது உள்ளூர் போட்டிகளில் குறைந்தது இன்னும் 6,7 வருஷங்கள் விளையாட வேண்டும் என கருத்தில் கொண்டு இதை எடுத்து உள்ளார் என பலர் கூறுகின்றனர்.
அதுவும் குறிப்பாக IPL – ல் அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது ஏனென்றால் இங்கிலாந்து குடியுரிமை பெற்று உள்ளதால் இவர் வெகுவிரைவில் விளையாடும் வாய்ப்பு நெருங்கி உள்ளது இப்படியிருக்க சமீபத்திய பேட்டி ஒன்றில் ரோஹித் மற்றும் விராட் கோலியை சாடியுள்ளார் அதுவும் கோலியைவிட ரோஹித்தை தாறுமாறாக பிரித்தெடுத்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான டேனிஸ் கனேரியா கூறுகையில் ஒருவரை நன்கு அறிந்து அதன் பின் தான் மதிப்பிட்டு அவரை பற்றி குறை கூற வேண்டும் நீங்கள் அதற்குள் ஒருவரை சாடுவது மிகவும் ஆபத்தானது அந்த வகையில் உலகில் தலைசிறந்த வீரரான ரோகித் சர்மா பல சாதனைகளை தன்வசப்படுத்தி உள்ளார்.
அவரை இப்படி குறை கூறுவதை யாரும் ஏற்று கொள்ளமாட்டார்கள். அமீர் கூறியது மிகப்பெரிய தவறு என கூறி அவரை புளந்து கட்டினார். மேலும் உலக அளவில் ரோஹித் ஷர்மா யார் என்பதை பல முறை காட்டி உள்ளார். அவர் ஒரு சிறந்த வீரர் என குறிப்பிட்டார்.