சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து நம்பர் ஒன் நாயகனாக வலம் வருகிறார் அண்மையில் கூட இவர் நடிப்பில் வெளியான அண்ணாத்த திரைப்படம் கூட பிரம்மாண்ட வெற்றி பெற்றதை தொடர்ந்து அடுத்த படத்தில் நடிக்க ரெடியாக இருக்கிறார்.
இதற்காக பல்வேறு சிறந்த இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறாராம். இப்படி தமிழ் சினிமாவில் ஓடிக்கொண்டிருக்கும் இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் உடன் கை கோர்த்தது பேட்ட என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் கைகோர்த்து சிம்ரன், மாளவிகா மோகனன், திரிஷா, சசிகுமார் விஜய் சேதுபதி பாபி சிம்ஹா மற்றும் பல நட்சத்திர பட்டாளங்கள் இந்த திரைப்படத்தில் நடித்து அசத்தினார். அப்போது வெளிவந்த இந்த படம் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தியது மேலும் விமர்சன ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் அடித்து நொறுக்கியது.
பேட்ட படம் ரஜினிக்கு மிகமுக்கிய படம் அந்த அளவிற்கு செம்ம மாஸான அதே சமயம் சென்டிமென்ட் கலந்த படமாக இந்த திரைப்படம் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கின்ற நிலையில் இந்த படத்தில் இருந்து ஒரு புதிய வீடியோவை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
பிளாக் பஸ்டர் படமான பேட்ட படத்தில் நீக்கப்பட்ட காட்சிகளை தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டு ரசிகர்களை கொண்ட வைத்துள்ளது அந்த மாஸ் காட்சிகளை நீங்களே பாருங்கள். விஜய் சேதுபதியின் ரஜினி ஆகிய இருவரும் சந்திக்கும் சூப்பர் சீன் இதோ.