தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் சிம்பு பல பிரச்சனைகளுக்கு பிறகு சில வருடங்களாக தொடர்ந்து அடுத்தடுத்து ஏராளமான வெற்றி திரைப்படங்களை தந்து வரும் நிலையில் அனைத்து திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியனை பெற்று வருகிறது. இவ்வாறு சிம்புவின் படம் ரிலீஸ்சாக ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் காத்து வருகின்றனர்.
அந்த வகையில் கடைசியாக இவருடைய நடிப்பில் பத்து தல படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்றிருந்தது. இந்நிலையில் தற்பொழுது இவர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் கமலஹாசன் அவர்களின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பில் உருவாக இருக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார்.
சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியான நிலையில் இதனை அடுத்து அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகி வருகிறது. அப்படி இந்த படத்திற்காக சிம்பு லண்டன் சென்று பயிற்சி எடுத்து வருகிறார் எனவும் தகவல் வெளியானது. இந்நிலையில் தற்பொழுது இந்த படத்திற்காக நடிகர், நடிகைகள் தேர்ந்தெடுக்கும் பணியில் இயக்குனர் பிஸியாக இருந்து வருகிறார்.
அப்படி இந்த படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக பிரபல முன்னணி நடிகை பாலிவுட் ஹீரோயின் தீபிகா படுகோன் நடிப்பதற்காக பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியானது. அதன் பிறகு தீபிகா படிப்போம் கண்டிப்பாக இந்த படத்தில் நடிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. ஏனென்றால் தீபிகா படுகோன் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்றால் ரூபாய் 30 கோடி சம்பளம் பெற்று வருகிறாராம்.
அதோடு மட்டுமல்லாமல் படப்பிடிப்பிற்காக வரும்பொழுது 5 ஸ்டார் ஹோட்டலில் தான் தங்குவாராம் மேலும் அவருக்கு ஒரு ரூம் மட்டுமல்லாமல் ஒரு ப்ளோரை மொத்தமாக புக் செய்ய வேண்டும் என கண்டிஷன் போடுவாராம். இதன் காரணமாக இந்த படத்தில் தீபிகா படுகோன் நடிக்க அதிக வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. எனவே இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக எந்த நடிகை இருக்கிறார் என்பது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.