சில நிமிடங்கள் மட்டுமே நடிக்க நயன்தாராவை விட பல மடங்கு அதிக சம்பளம் வரும் முன்னணி நடிகை.. டம்மி பீஸ்சான நயன்தாரா

nayanthara
nayanthara

Actress Nayanthara: தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் கலக்கி வருபவர் தான் நடிகை நயன்தாரா இவர் சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் இருந்து தற்போது வரையிலும் ஏராளமான முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிப்பதோடு மட்டுமல்லாமல் சோலோவாகவும் நடித்து வெற்றினை கண்டு வருகிறார்.

இவ்வாறு தமிழையும் தாண்டி தற்பொழுது பாலிவுட்டிலும் கால் எடுத்து வைத்துள்ளார். சமீப காலங்களாக தமிழில் சொல்லும் அளவிற்கு பட வாய்ப்புகள் அமையாத காரணத்தினால் மற்ற மொழி திரைப்படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் அட்லீ இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பாலிவுட் படமான ஜவான் படத்தில் முன்னணி நடிகர் ஷாருக்கான் ஜோடியாக நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் வருகின்ற செப்டம்பர் 7ஆம் தேதி அன்று ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்நிலையில் சினிமாவில் நயன்தாரா தான் ஹீரோக்கள் அளவிற்கு சம்பளம் வாங்கி வருகிறார் என நினைத்து வரும் நிலையில் தற்பொழுது நயன்தாராவை விட அதிக சம்பளம் வாங்கும் நடிகை குறித்து தகவல் வெளியாகி இருக்கிறது.

அதாவது, ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க வில்லனாக விஜய் சேதுபதி நடித்திருக்கிறார். மேலும் இவர்களை தொடர்ந்து பிரியாமணி, யோகி பாபு போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். அதோடு மட்டுமல்லாமல் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் இந்த படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ளாராம்.

இவ்வாறு கேமியோ ரோலில் நடிப்பதற்காக நடிகை தீபிகா படுகோன் 20 கோடி சம்பளம் வாங்கி இருக்கிறார். இந்த படத்தின் மூலம் பாலிவுட்டுக்கு அறிமுகமாகி இருக்கும் நயன்தாரா ஹீரோயினாக நடித்திருக்கும் நிலையில் இவருடைய சம்பளம் 10 கோடி தான். ஆனால் சில நிமிடங்கள் மட்டுமே நடக்க நயன்தாராவை விட 2 மடங்கு அதிகமாக தீபிகா படுகோன் சம்பளம் வாங்கியிருப்பது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.