90ஸ்களின் ஃபேவரிட் சீரியலாக இருந்து வரும் கனா காணும் சீரியல்கள் சில வருடங்களுக்கு முன்பு வெளியாகி மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்றது. கல்லூரி காலத்தில் இருக்கும் நண்பர்களின் நட்பினை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வந்த நிலையில் மிகப்பெரிய வெற்றினை கண்டது மேலும் இதனை வைத்து கல்லூரி காலங்கள் போன்ற சீரியல்களும் ஒளிபரப்பாகி நல்ல ரீச்சினை பெற்றது.
இப்படிப்பட்ட நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் கனா காணும் காலங்கள் சீரியலின் இரண்டாவது சீசன் ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த சீரியலும் மக்கள் மத்தியில் பெரும் ஆதரவுடன் ஓடிக்கொண்டிருக்கிறது மேலும் சில மாதங்களாக டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாக தொடங்கியுள்ளது.
இந்த சீரியலின் மூலம் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமாகியுள்ளவர் தான் நடிகை தீபிகா. இவர் கனா காணும் காலங்கள் சீரியலில் தன்னுடன் இணைந்து நடித்த ராஜா வெற்றி பிரபு என்பவரை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வைரலான நிலையில் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
ராஜா வெற்றி பிரபு பிரபல யூடியூப்பர் ஆவார் தன்னுடைய நடனத்தின் மூலம் பிரபலமான நிலையில் இவரை போலவே இன்ஸ்டாகிராமில் பிரபலமானவர் தான் தீபிகா. இவ்வாறு திருமணம் முடிந்த கையோடு இவர்கள் ரசிகர்களுடன் லைவில் இன்ஸ்டாகிராமில் கலந்துரையாடினார். அப்பொழுது அவர் நாங்கள் வந்திருக்கும் இடத்தில் நேற்று அஜித் சார் வந்திருந்தார்.
ஆனால் எங்களால் அவரை பார்க்க முடியவில்லை எனக்கு அஜித் குமார் என்றால் மிகவும் பிடிக்கும் அவர் இங்கு வருவது தெரிந்திருந்தால் நாங்கள் எங்கள் திருமணத்தை ஒரு நாள் முன்னாடி வைத்திருக்கலாம். அஜித் சார் உடன் புகைப்படம் எடுக்காதது எனக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது என்ற தீபிகா கூறியுள்ளார். இவர் பேசியதற்கு ரசிகர்கள் ஆறுதல் கூறிவரும் நிலையில் மேலும் இன்னும் இரு தினங்களில் கனா காணும் சீரியலில் நடிக்க இருப்பதாகவும் அதே ஸ்கூல் ஸ்கூல் டிரஸில் மீண்டும் ஆரம்பம் என தெரிவித்துள்ளார்.