தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் ஜெயம் ரவி தொடர்ந்து சமூகத்திற்கு நல்ல கருத்துக்களை கூறும் வகையில் வித்தியாசமான கதை அம்சமுள்ள திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இதன் காரணத்தினால் இவருடன் நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
அந்த வகையில் முழுக்க முழுக்க அம்மாவை மையமாக வைத்து விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் பிச்சைக்காரன். இந்த படத்தில் விஜய் ஆண்டனியின் அம்மாவாக நடித்திருந்த நடிகை ஒரு பிசினஸ்மேன் ஆவார் இவ்வாறு அவர் படத்தில் மட்டுமல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் ஒரு தொழிலதிபர் என்ற தகவல் தற்பொழுது வெளியாகி உள்ளது.
சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவந்த பிச்சைக்காரன் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்றது. அனைவரும் இந்த படத்தினை கொண்டாடிய நிலையில் இந்த படத்தில் விஜய் ஆண்டனியின் அம்மாவாக தீபா தொழிலதிபராக நடித்திருப்பார். இவருடைய உடல்நலம் சரியாக வேண்டும் என்பதற்காக விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் போல் சில நாட்கள் வாழ்வார்.
அந்த பிச்சை எடுப்பதன் மூலம் கிடைத்த பணத்தை கோவில் உண்டியலில் போடுவதையும் வழக்கமாக வைத்திருந்தார். இந்த நேரத்தில் விஜய் ஆண்டனியின் தாயார் சரியாக வேண்டும் என்பதற்காக அவர்களுடைய கம்பெனியில் வேலை செய்யும் அனைத்து தொழிலாளர்களும் கோவிலுக்கு சென்று வழிபடுவர்.
இப்படி நடிகை தீபா கேரக்டர் பிச்சைக்காரன் படத்தில் அமைந்த நிலையில் இவர் ரஜினியின் அருணாச்சலம் என்ற திரைப்படத்தின் மூலம் தான் சினிமாவிற்கு அறிமுகமாக இருக்கிறார். அதன் பிறகு கமலஹாசனின் உத்தம வில்லன், பாண்டியராஜின் பசங்க 2, சிவகார்த்திகேயனின் ரஜினி முருகன் நடித்த பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இதனை அடுத்து சசி இயக்கத்தில் பிச்சைக்காரன் படத்திற்கு முன்பாக வந்த சிவப்பு மஞ்சள் பை என்ற திரைப்படத்திலும் அம்மா கேரக்டரில் தீபா நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு சினிமாவில் வளர்ந்துள்ள நடிகை தீபா தன்னுடைய நிஜ வாழ்க்கையிலும் தன் கணவருடன் சேர்ந்து தொழிலதிபர் ஆகியுள்ளார். அதாவது பெண்களுக்கான ஜீன்ஸ் தயாரிக்கும் தொழிலை செய்து வரும் நிலையில் இவர் அமெரிக்காவில் தற்போது வசித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் இவர் செம ஸ்ட்ரைடாக இருக்கும் புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.