Vijay Antony : தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர் விஜய் ஆண்டனி இவர் நடிகராக மட்டுமில்லாமல் இசையமைப்பாளராகவும் ஓடி கொண்டிருக்கிறார் இவரை தொடர்ந்து அவரது மனைவியை பாத்திமா அவர்களும் படங்களை தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் சினிமாவில் அதிக ஈடுபாடு காட்டினாலும் தனது இரண்டு மகள்களையும் நன்றாக படிக்க வைத்தனர்.
குடும்பத்துடன் வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்து வந்தனர். யாரு கண்ணு பட்டதோ என்னவோ திடீரென விஜய் ஆண்டனியின் மூத்த மகள் மீரா சில தினங்களுக்கு முன் அதிகாலை 3 மணி அளவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது இறப்பு செய்தியை கேட்டு சினிமா பிரபலங்கள் பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.
மேலும் விஜய் ஆண்டனி மற்றும் அவரது மகள் குறித்து பல பிரபலங்கள் வெளிப்படையாக பேசி வருகின்றனர் பெரும்பாலும் சொல்வது என்னவென்றால் மீரா நன்றாக படிக்கக் கூடியவர் அவரது அப்பா பிச்சைக்காரன் 2 படத்தின் போது விபத்து ஏற்பட்டது அப்பொழுது கூட ரிப்போர்ட் எல்லாம் படித்துவிட்டு அப்பா சரியாக விடுவார் என அம்மாவுக்கு ஆறுதல் கொடுத்தவர் எப்பொழுதுமே பாசிட்டிவாக இருக்கும் மீரா இப்படி செய்து கொண்டது.
பலருக்கும் அதிர்ச்சியை கொடுப்பதாக கூறுகின்றனர். விஜய் ஆண்டனியும் சரிதான் சென்னையில் ஷூட்டிங் எங்கு நடந்தாலும் சூட்டிங் முடிந்த கையோடு உடனடியாக நேராக வீட்டுக்கு வந்து விடுவார். மனைவி மகள் என அனைவரின் மீதும் அதிக பாசம் வைத்திருந்தார் மகளை அவர் அடிப்பதோ அல்லது துன்புறுத்தவோ வாய்ப்பே இல்லை..
இப்படி இருந்தும் அவர் தற்கொலை செய்து கொண்டது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளதாம். விஜய் ஆண்டனி தனது மகள் இறப்புக்கு பிறகு வீட்டை விட்டு வெளியே வரவே இல்லையாம் சினிமா பிரபலங்கள் கூட விஜய் ஆண்டனியை பார்த்து ஆறுதல் சொல்லலாம் என்று பார்த்தால் கூட ரூமை விட்டு அவர் வெளியே வருவது ரொம்ப அரிதாக இருக்கிறதாம்.