டிசம்பர் 25 முதல் திரையரங்குகளில் மட்டும் சியான்கள் திரைப்படம் வெளியிடப்படுகிறது.! வீடியோ இதோ

siyankal

வித்தியாசமான கதையம்சம் கொண்ட திரைப்படம் வரும் டிசம்பர் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது அதாவது சியான்கள் என்ற திரைப்படம் டிசம்பர் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது இந்த திரைப்படத்தை வைகரை பாலன் இயக்க கரிகாலன் ஹீரோவாக நடித்துள்ளார் மேலும் கரிகாலனே படத்தின் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பாக இந்த படத்தை தயாரித்து உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

அதுமட்டுமில்லாமல் முத்தமிழ் என்பவர் இந்த படத்திற்காக இசையமைக்கிறார் பாபு குமார் என்பவர் ஒளிப்பதிவு செய்துள்ளார் மேலும் மப்பு ஜோதிகுமார் இந்த திரைப்படத்திற்கு எடிட்டிங் பணிகளை செய்து கொடுத்துள்ளார் என்று தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து இந்த திரைப்படத்திலிருந்து ஒரு வீடியோ பாடல் சமூக வலைதள பக்கங்களில் வெளியாகியுள்ளது.

வெளியான இந்த பாடல் ரசிகர்களிடையே தற்போது வரை நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது மேலும் இந்த படம் வரும் டிசம்பர் 25ஆம் தேதி முதல் திரையரங்குகளில் மட்டும் வெளியாக உள்ளது.

படம் ஹிட் அடிக்குமா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.